150 சவரன் நகை பத்தலையாம்.. வரதட்சணை கேட்டு டார்ச்சர்.. மதுரையில் இளம்பெண் தற்கொலை! கொடூரம்
மதுரை: வரதட்சணை என்பது சட்டப்படி தவறு எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் கூட இன்னுமே வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையே மதுரையில் இளம்பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றமாகும். ஆனால், இன்னுமே நமது நாட்டில் வரதட்சணைக் கொடுமை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் பெண்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் இதுபோல ஒரு மோசமான சம்பவம் நடந்தது.

மீண்டும் ஒரு ரிதன்யா சம்பவம்
ரிதன்யா என்ற பெண்ணிடம் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதில், அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டிருந்தார். அப்போதே மாநிலம் முழுக்க இந்தச் சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே மீண்டும் அப்படியொரு மோசமான சம்பவம் தான் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை இளம்பெண் தற்கொலை
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் புகாரளித்துள்ளனர். பெண்ணிடம் வரதட்சணையாக நகை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாகவும் இதனால் அந்தப் பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் ரூபன்ராஜுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்துள்ளது. அப்போது மணமகன் வீட்டார் வரதட்சணையாக 300 சவரன் நகை கேட்டுள்ளனர். பெண் வீட்டார் திருமணத்தின் போது 150 சவரன் நகை போட்டதாகச் சொல்லப்படுகிறது.. ஆனாலும், 150 சவரன் தங்கம் மணமகன் குடும்பத்திற்கு போதவில்லையாம்.
150 சவரன் நகை
மேலும் 150 சவரன் நகை கேட்டு மணமகன் வீட்டார் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே திருமணம் நடந்து முடிந்து சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ரூபன்ராஜ் - பிரியதர்ஷினி பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் மனமுடைந்த பிரியதர்ஷினி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தற்கொலை
தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பிரியதர்ஷினி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சிகளை எடுத்தனர். இருப்பினும், அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பிரியதர்ஷினி தற்கொலைக்கு மணமகன் வீட்டார் செய்த டார்ச்சர் தான் காரணம் என பிரியதர்ஷினி பெற்றோர் புகாரளித்துள்ளனர். இது தொடர்பாக அவரது கணவர் ரூபன் ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தன்பாக்கியம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications