‛கம்மி’ கட்டணம்! இனி ரயில் நிலையங்களில் ‛வெட்டிங்’ போட்டோஷூட்! மதுரை டிஆர்எம் ‛ஸ்வீட் நியூஸ்’
மதுரை: ரயில் நிலையங்களில் திருமண ஜோடிகள் போட்டோஷூட் நடத்தி கொள்ளவும், கல்விசார்ந்த போட்டோஷூட் மற்றும் பர்சனல் பயன்பாட்டுக்கும் போட்டோஷூட் நடத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தனித்தனி கட்டண விபரத்தையும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது அனைத்து சுபநிகழ்ச்சிகளிலும் போட்டோஷூட் முக்கியமாக இடம்பெற்று வருகிறது. திருமண விழா என்றால் நிச்சயத்தார்த்தம், திருமண விழா தவிர ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டை ஜோடிகள் எடுத்து கொள்கினற்னர். அதேபோல் குழந்தைகளின் பிறந்தநாள் விழாவையொட்டியும் அவுட்டோர் போட்டோஷூட் எடுப்பது அதிகரித்து வருகிறது.

இதனால் தற்போது போட்டோஷூட் என்பது அதிகரித்து வருகிறது. இந்த போட்டோஷூட்டுக்காக ஒவ்வொருவரும் வெளிமாநிலங்கள் அல்லது தங்களின் ‛பேவரைட்' இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தான் மதுரை ரயில் நிலையத்தில் ஜோடிகள் ‛ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்' நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளார். அதில் ‛‛மதுரை ரயில் நிலையத்தில் புதுமண தம்பதியர் ரூபாய் 5000 கட்டணம் செலுத்தி பல புகைப்படங்கள் எடுத்து கொள்ளலாம். ரயில் பெட்டி பின்புலம் வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் ரூபாய் 1500. மற்ற ரயில் நிலையங்களுக்கான கட்டணம் ரூபாய் 3000 (ரயில் பெட்டிக்கு கூடுதலாக ரூபாய் 1000) என தெரிவித்துள்ளார். இதனை இன்னும் தெளிவாக ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ரயில் நிலையங்களில் போட்டோ மற்றும் வீடியோ போட்டோகிராபி எடுப்பதற்கான வழிக்காட்டுதல்கள் 2007 ல் வெளியிடப்பட்டன. இதன்மூலம் வணிகம் சாராத வகையில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் செல்போன் கேமரா அல்லது டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தி ரயில் நிலையங்களில் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து கொள்ள முடியும். அந்த வகையில் தற்போது வணிகம் மற்றும் கல்விசார்ந்த விஷயங்களுக்கு ரயில் நிலையங்களில் போட்டோஷூட் நடத்தி கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
ரயில்வேயை பொறுத்தமட்டில் X சிட்டி, Y சிட்டி, Z சிட்டி என 3 வகைகள் உள்ளன. இந்த சிட்டிகளை பொறுத்து போட்டோஷூட்டுக்கான லைசென்ஸ்(அனுமதி) கட்டணம் மாறுபடுகிறது. அதன்படி திருமண போட்டோஷூட் உள்ளிட்ட வணிகம் சார்ந்த விஷயங்களுக்கான போட்டோஷூட்டுக்கு ‛எக்ஸ்' சிட்டியில் ரூ.10 ஆயிரம், ‛ஒய்' சிட்டியில் ரூ.5 ஆயிரம், ‛இசட்' சிட்டியில் ரூ.3 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கல்வி சார்ந்த விஷயங்களுக்கான போட்டோஷூட் நடத்த ‛எக்ஸ்' சிட்டிக்கு ரூ.5 ஆயிரம், ‛ஒய்' சிட்டிக்கு ரூ.2,500, ‛இசட்' சிட்டிக்கு ரூ.1,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தனிப்பட்ட விஷயங்களுக்காக போட்டோஷூட் எடுக்க ‛எக்ஸ்' சிட்டியில் ரூ.6 ஆயிரம், ‛ஒய்' சிட்டியில் ரூ.3,500, ‛இசட்' சிட்டியில் ரூ.2,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மதுரை என்பது ரயில்வேயில் ‛ஒய்' சிட்டியாக உள்ளது. இதனால் மதுரை ரயில் நிலையத்தில் புதுமண ஜோடிகள் போட்டோ எடுத்து கொள்ள ரூ.5000, கல்விசார் போட்டோஷூட்டுக்கு ரூ.2,500, பர்ஷனல் பயன்பாட்டுக்கான போட்டோஷூட்டுக்கு ரூ.3,500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரயில்வேயின் அந்த அறிக்கையில் இன்னொரு தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம் தவிர ரயில்கள், ரயில் பெட்டிகளின் முன்பு, ரயில்வே டெர்மினல் உள்ளிட்டவற்றில் ‛வெட்டிங் போட்டோஷூட்' நடத்த ‛எக்ஸ்' சிட்டிக்கு ரூ.3000, ‛ஒய்' சிட்டிக்கு ரூ.1,500, ‛இசட்' சிட்டிக்கு ரூ.1000 கூடுதலாக செலுத்த வேண்டும். அதேபோல் கல்விசார் விஷயங்களுக்கான இந்த போட்டோஷூட்டுக்கு ‛எக்ஸ்' சிட்டிக்கு ரூ.1,500, ‛ஒய்' சிட்டிக்கு ரூ.750, ‛இசட்' சிட்டிக்கு ரூ.500ம், தனிப்பட்ட பயன்பாட்டுக்கான போட்டோஷூட்டுக்கு ‛இசட்' சிட்டிக்கு ரூ.2,500, ‛ஒய்' சிட்டிக்கு ரூ.1,000, ‛இசட்' சிட்டிக்கு ரூ.750 கூடுதல் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications