உசுர கொடுக்க கோடி பேரு.. மதுரகாரய்ங்கனா சும்மாவா? வேட்டையனுக்கு வெறித்தன வெயிட்டிங்! போஸ்டரை பாருங்க
மதுரை: சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' பட ரிலீஸை கொண்டாடும் விதமாக மதுரை குரு தியேட்டர் பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் ரஜினிகாந்துக்காக 75 அடி நீள போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். வேட்டையன் பட ரிலீசுக்கு இன்னும் பல நாட்கள் இருக்கும் நிலையில், இப்போதிலிருந்து அலப்பறை கொடுத்து வருகின்றனர் மதுரையன்ஸ்..
75களில் நடிக்க துவங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்திற்கு 75 அடி நீளத்திற்கு பிளக்ஸ் போஸ்டர் வைத்து கொண்டாடி வருகின்றனர் மதுரை ரஜினி ரசிகர்கள்..

தமிழகத்தில் அரசியல் மற்றும் சினிமா என்றால் அதில் முக்கிய பங்கு வகிப்பது மதுரை மாவட்டம். திரை உலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்து 75கள் முதல் தற்போது இருக்கக்கூடிய இளைஞர்கள் வரை அனைவருடைய மனதையும் கவர்ந்த ஒரு நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான்.
75களில் திரையுலகில் கால் பதித்த அவருக்கு மதுரையில் தான் முதன் முதலில் ரசிகர் மன்றம் துவங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய நடிப்பில் வெளி வரக் கூடிய அனைத்து படங்களையும் மதுரை சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அக்டோபர் மாதம் வெளிவரக்கூடிய வேட்டையன் திரைப்படத்தை தற்போது கொண்டாடி மகிழ தொடங்கிவிட்டனர்.
மதுரையின் முக்கிய பகுதிகளில் 75-ல் நடிக்க துவங்கிய ரஜினிகாந்த் அவர்களுக்காக 75 அடி நீளத்திற்கு பிளக்ஸ் போஸ்டர் அடித்துள்ளனர். குறிப்பாக தேனி திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் புறப்படும் இடமான ஆரப்பாளையத்தில் இருந்து செல்லக்கூடிய பகுதியாக இருக்கக்கூடிய குரு தியேட்டர் பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் ஆரம்ப காலகட்டத்தில் ரஜினிகாந்த் முதல் தற்போது வெளிவர உள்ள வேட்டையன் படம் வரை உள்ள புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் மதுரையின் முக்கிய பகுதிகளை நான்கு இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
வேட்டையன்: டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் புதிய படம் வேட்டையன். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் அக்டோபர் பத்தாம் தேதி ஆயுத பூஜையை குறிவைத்து இந்த படம் வெளியாகிறது. லைகா ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமல்லாது, அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடம் பெற்று இருந்த மனசிலாயோ பாடல் வெளியாகி ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்தது. ஓணம் பண்டிகையோடு பாடல் வெளியாக பலரும் ரீல்ஸ் போட்டு இன்ஸ்டாகிராமை திணற வைத்தனர். இந்த நிலையில் அடுத்து ஹண்டர் வர்றார் பாடலும் வெளியானது. இந்த நிலையில் வேட்டையன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது அதை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications