மாமனாருன்னுகூட பார்க்கலியே.. தலைக்கேறிய "கிறக்கம்".. பரிதாப பவித்ரா.. ஒரே நொடியில் விக்கித்த மதுரை

Subscribe to Oneindia Tamil

மதுரை: தன்னுடன் குடும்ப நடத்த மனைவி வராமல் சென்றது, கணவர் பூவேந்தனுக்கு ஆத்திரத்தை தந்துவிட்டது.. கடைசியில் 2 கொலை வரை சென்றுவிட்டது இந்த குடும்ப தகராறு.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது எருமாப்பட்டி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் மாயி.. 55 வயதாகிறது.. இவரது மகள் பவித்ரா.. 25 வயதாகிறது. பவித்ராவின் கணவர் பூவேந்தன்.. 27 வயதாகிறது..

Madurai Father in law and why did son in law take this sudden decision who is is this Pity woman Pavithra

உசிலம்பட்டி அருகே உள்ள சொரக்காபட்டியைச் சேர்ந்தவர் பூவேந்தன்.. இவர்கள் இருவருமே காதலித்து கல்யாணம் செய்துள்ளனர்.. இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.. 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

ஆனால், பூவேந்தன், கஞ்சா போதைக்கு அடிமையாகியிருக்கிறார்.. அத்துடன் போதையில் வீட்டுக்கு வந்து பவித்ராவிடம் தகராறிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது... எனவே, தம்பதிக்குள் இது தொடர்பாக அடிக்கடி தகராறு வந்துபோயிருக்கிறது..

தகராறு: கடந்த வாரமும் இப்படித்தான் சண்டை வந்துள்ளது. மகளின் வாழ்க்கை நாசமாகி கொண்டிருப்பதை பார்த்து மனம் வேதனையுற்ற பவித்ராவின் அப்பா மாயி, 3 நாட்களுக்கு முன்பு வந்து மகளை தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார். தேனி அருகே உள்ள பழனிச்செட்டிபட்டியில் உள்ள முருகன் கோவில் தெருவில் இருக்கும் தன்னுடைய உறவினர் வீட்டில், 3 நாட்களாக பவித்ராவும், அவரது அப்பாவும் தங்கியிருந்தனர்.

தன்னைவிட்டு பிரிந்து சென்ற ஆத்திரத்தில், நேற்று மதியம் பழனிச்செட்டிபட்டி வீட்டுக்கு, தன்னுடைய நண்பருடன் பைக்கில் வந்தார் பூவேந்தன்.. மனைவியுடனும், மாமனாருடனும் தகராறு செய்தார்..

Madurai Father in law and why did son in law take this sudden decision who is is this Pity woman Pavithra

கத்திக்குத்து: ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த பூவேந்தன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், பவித்ராவை சரமாரியாக குத்தினார்.. இதைப்பார்த்து அலறிக்கொண்டே தடுக்க வந்த மாமனார் மாயியையும் கத்தியால் குத்திக்கொன்றார்..

பவித்ரா, மாயி இருவருமே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்ததையடுத்து, பூவேந்தன் அங்கிருந்து பைக்கில் எகிறி தப்பினார்.. ஆனால், பூவேந்தனுடன் வந்த அவரது நண்பர் முருகேசனை அந்த பகுதி மக்களே விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பரபரப்பு: இது குறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர். இப்போது பூவேந்தன் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.. போலீசார் இன்னமும் தேடி வருகின்றனர்... நேற்றைய தினமும் தலைக்கேறிய கஞ்சா போதையுடன்தான் தகராறு செய்திருக்கிறார் பூவேந்தன்.. பவித்ராவும், மாயியும் தங்கியிருந்தது, மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியாகும்.. இதனால், அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+