அரசு நிலத்தில் முருகன் சிலையும் வேண்டாம்.. சிலுவையும் வேண்டாம்.. ஹைகோர்ட் நீதிபதிகள் சொன்ன கருத்து!
மதுரை: கன்னியாகுமரியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் முருகன் சிலையும் வைக்க வேண்டாம், சிலுவையும் வைக்க வேண்டாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஒட்டுக்குழி கிராமத்தைச் சேர்ந்த சில்வன் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி மாவட்டம் பைங்குளம் கிராம மலை உச்சியில் இருந்த முருகன் சிலையை அகற்றும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பின் அந்த முருகன் சிலை மலை உச்சியில் இருந்து அகற்றப்பட்டது.

இது சட்டவிரோதம். இதனால் அந்த சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், முருகன் சிலையை மீண்டும் அங்கு வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் மனுதாரர், முருகன் சிலை 100 ஆண்டுகள் பழமையானது என்று கூறி இருக்கிறார். ஆனால் 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட டிரோன் வீடியோவில் மலை உச்சியில் முருகன் சிலை இல்லை. இதுதொடர்பான ஆவணங்களை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. எனவே தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலம் யாருக்கு சொந்தமானது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, அந்த நிலம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் என்று கூறினார். அதேபோல் இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், நிலம் அரசுக்கு சொந்தமானது என்ற போது, அங்கு சிலுவையும் வேண்டாம்.. முருகன் சிலையும் வேண்டாம் என்று கூறினர். தொடர்ந்து, இதுதொடர்பாக தாக்கலான அனைத்து மனுக்களையும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கின் விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கிலும் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கொடுத்து உத்தரவிட்டார். இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கும், இதே அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications