மதுரையில் காலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. மாலையில் கணவன், மனைவி, மகள் என யாருமே உயிருடன் இல்லை
மதுரை : மதுரை செல்லூரில் மனைவியின் பிறந்தநாளை காலையில் கேக் வெட்டி கொண்டாடிய கணவன் மாலையில் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தார். இதனால் மனைவி மற்றும் மகள் ஆகியோர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவருக்கு 42 வயதாகிறது.. இவரது மனைவி ஜாக்குலின் ராணிக்கு 37 வயதாகிறது. இவர்களது மகள் மதுவுக்கு 10 வயதாகிறது.. மது செல்லூர் பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். காளிமுத்து தச்சு தொழில் செய்து வந்தார்..

செவ்வாய்கிழமையான நேற்று காளிமுத்துவின் மனைவி ஜாக்குலின் ராணிக்கு பிறந்தநாள் ஆகும். காலையில் காளிமுத்து கேக் வாங்கி வந்து வெட்டி மனைவி குழந்தைகளுக்கு கேக் ஊட்டிவிட்டு கொண்டாடி உள்ளார். ஆனால் மதியம் கூடல்நகர் பகுதியில் ரயில் முன் பாய்ந்து காளிமுத்து உயிரை மாய்த்து கொண்டார்.
இதையடுத்து அடையாளம் கண்ட ரயில்வே போலீசார், காளிமுத்துவின் உறவினர் எண்ணை அழைத்து காளிமுத்து உயிரை மாய்த்து கொண்டதை தெரிவித்தனர். இதுகுறித்து ஜாக்லின் ராணிக்கு தகவல் தெரிவிக்க செல்போனில் அவரது உறவினர் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அழைப்பை ஏற்கவில்லை.
இதையடுத்து காளிமுத்துவின் சகோதரி கணவர் நேரில் தகவல் தெரிவிக்க சென்றுள்ளார். ஆனால் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து பார்த்த போது ஒரே சேலையில் ஜாக்குலின் ராணியும், மதுவும் தற்கொலை செய்து கொண்டிருந்தனர். அடுத்தடுத்து கணவர், மனைவி, மகள் தற்கொலை செய்து கொண்டது மதுரை செல்லூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை குறித்து செல்லூர் போலீசார் விசாரித்த போது, கடன் தொல்லை காரணம் என்பது தெரியவந்தது.
காளிமுத்துவுக்கும் ஜாக்குலின் ராணிக்கும் கடன் பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மதுரை பனங்காடியில் தனது பெற்றோருக்கு காளிமுத்து வீடு கட்டி வந்துள்ளார். இதற்காக ரூ.15 லட்சம் வங்கி கடன் வாங்கி உள்ளார். இதற்காக மாதம் ரூ.20 ஆயிரம் தவணை செலுத்தி வந்திருக்கிறார். போதிய வருமானமின்றியும், வங்கிக்கு மாத தவணை செலுத்த முடியாமலும் மனஅழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார் காளிமுத்து..
நேற்று காலை மனைவி பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில கிளம்பிய காளிமுத்து, தன் மனைவிக்கு வாட்ஸ் ஆப்பில் 'விடைபெறுகிறேன்' என்று மெசேஜ் அனுப்பிவிட்டு கூடல்நகர் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதையடுத்த வாட்ஸ் ஆப் மெசேஜை பார்த்து மகளுடன் மனைவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications