மாப்ளே.. நான் ரெடி.. நீ ரெடியா.. ஜல்லிக்கட்டு டோக்கன் வாங்கிவிட்டு கண் சிமிட்டும் காளைகள்!
Recommended Video
மதுரை : அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு இன்று துவங்கியது. டோக்கன்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டினர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைத்திருநாள் முதல் நாளான பொங்கல் அன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு பணிகள் துவங்கியது.

காலை 8 மணிக்கு முன்பதிவு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு முதலே காலை உரிமையாளர்கள் அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் குவிய தொடங்கினர். காலையில் முன்பதிவிற்கு ஒரு நபருக்கு ஒரு டோக்கன் மட்டுமே வழங்கப்படும். என்றும் கால்நடை மருத்துவர் வழங்கிய சான்று, கால்நடைகளுக்கான அடையாள சான்று, டிடி மற்றும் கால்நடை உரிமையாளரின் ஆதார் அட்டை கைபேசி எண் ஆகியவை கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் கால்நடை மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான பேர் கூடியிருந்தனர் இதில் பெண்களும் கலந்து கொண்டனர் தங்களை முன்பதிவு செய்ய பெண்கள் கலந்து கொண்டனர்.
கால்நடை மருத்துவத் துறை இணை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா உதவி இயக்குனர் எம் எஸ் சரவணன் சரவணன் தலைமையில் 16 பேர் கொண்ட குழுக்கள் முன்பதிவு டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கான பாதுகாப்பு பணியில் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கும் டோக்கள் வழங்கப்பட்டு வருகிறது. பாலமேட்டில் 16ம் தேதியும், அலங்காநல்லூரில் 17ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications