மதுரை ஜீவிதா நாச்சியார் வர்றாரு.. சசிகலாவின் முக்குலத்தோர் வாக்கு A டூ Z பிளான்.. ஆடிப்போன எடப்பாடி
மதுரை: மதுரை மாவட்டத்தின் விஐபி தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் திருமங்கலத்தில், வரவிருக்கும் தேர்தல் களம் வழக்கத்தை விட அதிக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு முறையும் இங்கு வெற்றி வாகை சூடிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இந்த முறையும் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் தனது தேர்தல் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார். இருந்தாலும் அவருக்கு எதிராகத் திரண்டுள்ள அரசியல் சக்திகளும், சொந்தக் கட்சிக்குள்ளேயே நிலவும் அதிருப்திகளும் இம்முறை அவருக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அது என்ன தெரியுமா?
ஆர்.பி. உதயகுமாரின் அரசியல் பயணம் பல்வேறு திருப்புமுனைகளைக் கொண்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவிற்கு ஆதரவாக முதலில் குரல் கொடுத்தவர்களில் ஒருவரான இவர், காலப்போக்கில் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரிய தளபதியாக மாறினார்.

இப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவராக உயர்ந்துள்ள நிலையில், தன்னைப் புறக்கணித்த உதயகுமாரை இந்தத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
மதுரை ஜீவிதா நாச்சியார்
இதற்காக, இன்ஸ்டாகிராம் மற்றும் சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமான ஜீவிதா நாச்சியாரை திருமங்கலத்தில் களமிறக்க சசிகலா திட்டமிட்டுள்ளாராம்.. அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜீவிதா நாச்சியார், இப்போது சசிகலாவுடன் இணைந்து செயல்படுவது தொகுதியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, திருமங்கலம் தொகுதியில் கணிசமாக உள்ள முக்குலத்தோர் வாக்குகளை கவர்வதில் ஜீவிதா நாச்சியார் முக்கியப் பங்கு வகிப்பார் என்று கணிக்கப்படுகிறது. இது ஆர்.பி. உதயகுமாரின் வாக்கு வங்கியில் பெரிய விரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மற்றொரு புறம், ஓபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கும் விழாவை திருமங்கலத்திலேயே நடத்தியது, உதயகுமாருக்கு விடப்பட்ட நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது.
ஆர்பி உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி அணியில் தனக்கு எதிராக தீவிரமாக செயல்பட்ட உதயகுமாரை அவர் தொகுதியிலேயே முடக்க வேண்டும் என்ற நோக்கில் ஓபிஎஸ் காய்களை நகர்த்தி வருகிறார்.
கூட்டணி அரசியலை பொறுத்தவரை, அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக இணைந்திருந்தாலும், ஆர்.பி. உதயகுமாருக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையிலான தனிப்பட்ட மோதல் இன்னும் தணியவில்லை.
கடந்த காலங்களில் தினகரனை ஒருமையில் விமர்சித்த உதயகுமாருக்கு எதிராக, அமமுக தொண்டர்கள் உள்ளுக்குள் அதிருப்தியில் உள்ளனர். இது தேர்தல் நேரத்தில் சசிகலா தரப்பு நிறுத்தப்போகும் வேட்பாளருக்கு சாதகமாக அமையக்கூடும் என்ற பேச்சும் பலமாக எழுந்துள்ளது.
திமுகவின் பலமான கட்டமைப்பு
திமுகவின் பலமான கட்டமைப்பு, சசிகலா அணியின் புதிய வேட்பாளர், மற்றும் அமமுக - அதிமுக இடையிலான பனிப்போர் என மும்முனை தாக்குதலை ஆர்.பி. உதயகுமார் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, அதிமுகவின் உள்ளூர் நிர்வாகிகளிடையே நிலவும் உட்கட்சிப் பூசலும் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இத்தனை தடைகளையும் தாண்டி திருமங்கலத்தில் தனது செல்வாக்கைத் தக்கவைத்து உதயகுமார் மீண்டும் வெற்றி பெறுவாரா அல்லது புதிய அரசியல் திருப்பங்கள் நிகழுமா என்பது தேர்தல் முடிவிலேயே தெரியவரும்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications