Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியுமா? ஸ்பாட்டுக்கே சென்று நீதிபதி சுவாமிநாதன் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் அறநிலையத் துறை அதிகாரிகளுடன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மலை உச்சிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

Thirupparangundram hill

இது தொடர்பாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராமரவிக்குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கார்த்திகை தீபம் இந்துக்களின் பாரம்பரியமான பண்டிகையாகும். கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் பவுர்ணமியின் போது கொண்டாடப்படுகிறது.

முருகன், சிவபெருமான் கோயில்களில் விழாக்கள் நடைபெறும். அந்தந்த தீபத்தூண் அல்லது மலை உச்சியில் உள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் டிசம்பர் 3ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யுமாறு கோயில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன்.

மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்திற்கு சட்ட ரீதியாக தடை எதுவும் இல்லை. பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு பதிலாக மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பழமையான தீபத்தூணை கோயில் நிர்வாகம் மூடி மறைத்துள்ளது. இது பாரம்பரிய இடத்தில் பக்தர்களின் மதச் சடங்குகள் செய்வதை தடுக்கும் செயலாரும். அது சட்டவிரோதமானதும் கூட!

இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு உரிய பாதுகாப்பையும் அளிக்க உத்தரவிட வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் தங்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்துக் கொள்ள மதுரை சோலை கண்ணன், திருவண்ணாமலை அரங்கரநாதன் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.

அப்போது சோலைக்கண்ணன் உள்ளிட்ட மனுதாரர்கள் கூறுகையில், தீபத்தூணில் தீபம் ஏற்றினால்தான் சுற்றியுள்ள ஊர்களுக்கு தெரியும். அந்த தீபத்தை பார்த்து அவர்கள் தங்கள் வீடுகளில் ஏற்றும் வழக்கம் உள்ளது.

உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றினால் யாருக்கும் தெரியாது. தீபத்தூணில் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாது. பிற மதத்தினர் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு, அறநிலையத் துறை தரப்பில்தான் அனுமானத்தின் அடிப்படையில் ஆட்சேபம் தெரிவிக்கப்படுகிறது என்றார்.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், 1920ஆம் ஆண்டு முதல் 105 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நடைமுறையை தற்போது மாற்ற முடியாது. மலைஉச்சியில் உள்ள தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என மனுதாரர் கோருவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

மனுதாரர் கோரிக்கை தொடர்பாக கோயில் செயல் அலுவலருக்கு அனுப்பிய மனுவில் தீபத்துாணில்தான் ஏற்ற வேண்டும் என குறிப்பிடவில்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். பாரம்பரியமாக ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்றம் 1994 ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது.

மனுதாரரின் மனுவை கோயில் செயல் அலுவலர் நிராகரித்ததை எதிர்த்து அறநிலையத் துறை இணை ஆணையர் மற்றும் கமிஷனரிடம் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். நேராக நீதிமன்றம் வந்தது ஏற்புடையதல்ல என்றார்.

அது போல் அரங்கநாதன் தரப்பு வாதிடுகையில், மனுவில் கோரிய இதே நிவாரணம் தொடர்பாக ஏற்கனவே தாக்கலான மற்றறொரு வழக்கை 2017ல் இரு நீதிபதிகள் அமர்வு நிராகரித்தது. அதே நிவாரணத்தை மீண்டும், மீண்டும் கோர முடியாது. உச்சநீதிமன்றத்தில்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இதை தனி நீதிபதி விசாரிக்க முடியாது கோயில் நடைமுறை, பழக்க வழக்கங்கள் தொடர்பான விவகாரங்களில் சிவில் நீதிமன்றம்தான் தீர்வு காண வேண்டும் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுவாமிநாதன், "தொல்லியல் துறை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா நிர்வாகத்தை எதிர்மனுதாரர்களாக சேர்த்து நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் திருப்பரங்குன்றம் வந்த நீதிபதி சுவாமிநாதன் பழைய படிக்கட்டுகள் வழியாக மலைக்கு சென்றார். அங்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படும் உச்சிபிள்ளையார் கோயில் மண்டபம், தீபத்தூண், அதன் அருகில் இருக்கும் மண்டபங்களை பார்வையிட்டார்.

மலை உச்சியில் உள்ள தீபத்தூணுக்கு சென்ற போது இருட்டிவிட்டது. இதனால் டார்ச் வெளிச்சத்தில் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் புதிய படிக்கட்டுகள் வழியாக இரவு 7.15 மணிக்கு கீழே இறங்கி வந்தார்.

மலையில் இருந்து இறங்கியதும் தன்னுட் ஆய்வு வந்த போலீஸாருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தனது காரில் இருந்த தண்ணீர் பாட்டில்களை போலீஸாருக்கு கொடுத்தார். இந்த ஆய்வுக்காக நீதிபதி, போலீஸ் ஜீப்பில் வந்தார். ஆய்வு முடிந்ததும் அவரது காரில் புறப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+