3ம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக.. வெற்றிவாகை சூடிய சு.வெங்கடேசன்! மதுரை லோக்சபா தேர்தல் முடிவுகள்!
மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில் சிட்டிங் எம்.பி சு.வெங்கடேசன், அதிமுக வேட்பாளர் சரவணன், பாஜக சார்பில் ராம.சீனிவாசன், நாம் தமிழர் கட்சியின் சத்யாதேவி ஆகியோர் களத்தில் நின்ற நிலையில், வெற்றி வாகை சூடி உள்ளார் சு.வெங்கடேசன். சு.வெங்கடேசன் 2.09 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவின் சரவணன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும் தற்போதைய எம்.பியுமான சு.வெங்கடேசன், அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாதேவி ஆகியோருக்கு இடையேதான் போட்டி உள்ளது.

லோக்சபா தேர்தல் வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மதுரை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசன் முன்னணியில் இருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் 4,30,323 வாக்குகளும், பாஜகவின் ராம.சீனிவாசன் 2,20,914 வாக்குகளும், அதிமுகவின் சரவணன் 2,04,804 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சத்யா தேவி 92,879 வாக்குகளும் பெற்றுள்ளனர். வாக்கு வித்தியாசம்: 2.09 லட்சம்
மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு அவரது கட்சியினர் மட்டுமில்லாது அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கடுமையாக தேர்தல் பணி ஆற்றினர். காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சியினரும் சுற்றிச் சுழன்று சு.வெங்கடேசனுக்காக பணியாற்றினர். கூட்டணிக் கட்சிகளின் பலமும், தீவிர பிரச்சாரமும் அவருக்கு சாதகமாக உள்ளன.
அதிமுக வேட்பாளரான டாக்டர் சரவணனுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஐடி விங் மண்டலச் செயலாளர் ராஜ் சத்யன் உள்ளிட்டோர் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் பணியாற்றினர். தேமுதிக, எஸ்டிபிஐ போன்ற கூட்டணிக் கட்சியினரின் ஆதரவும் உள்ளது.

பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக, அமித் ஷாவே வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். டிடிவி. தினகரனின் அமமுகவுக்கான செல்வாக்கும் மதுரையில் அவருக்கு கைகொடுக்கும். நாம் தமிழர் வேட்பாளர் சத்யாதேவியும் போட்டிக் களத்தில் உள்ளார். இந்தப் போட்டியில் வென்று தூங்கா நகரின் எம்.பி ஆகப்போவது யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
மதுரை லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 15,82,271
ஆண் வாக்காளர்கள்: 7,77,145
பெண் வாக்காளர்கள்: 8,04,928
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 198
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் - 9,81,650
பதிவான வாக்கு சதவீதம் - 62.04 %
மதுரை மக்களவைத் தொகுதியில் மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு மற்றும் மேலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கி உள்ளன. இதில் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக 4 தொகுதிகளிலும் அதிமுக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
இதுவரை நடந்த தேர்தல்களில் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக தலா ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 8 முறை வென்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 முறை வென்றுள்ளது.
பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர்களான கே.டி. தங்கமணி, ராமமூர்த்தி, சங்கரய்யா போன்றோர் எம்பிக்களான தொகுதி இது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கக்கன் போன்றோர் இந்தத் தொகுதியில் களம் கண்டுள்ளனர். சுப்பிரமணியன் சுவாமி, மு.க.அழகிரி ஆகியோர் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர்களாக செயல்பட்டுள்ளனர்.
2019 மதுரை மக்களவைத் தேர்தல் முடிவுகள்:
சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 4,47,075
விவிஆர் ராஜ் சத்யன் (அதிமுக) - 3,07,680
டேவிட் அண்ணாதுரை (அமமுக) - 85,747
அழகர் (மநீம) - 85,048
பாண்டியம்மாள் (நாதக) - 42,901
வெற்றி வாக்கு வித்தியாசம் - 1,39,395
2014 மதுரை மக்களவைத் தேர்தல் முடிவுகள்:
கோபாலகிருஷ்ணன் (அதிமுக) - 4,53,785
வேலுசாமி (திமுக) - 2,54,361
சிவமுத்து குமார் (தேமுதிக) - 1,46,751
பரத் நாச்சியப்பன் (காங்கிரஸ்) - 32,154
வெற்றி வாக்கு வித்தியாசம் - 1,99,424
2009 மதுரை மக்களவைத் தேர்தல் முடிவுகள்:
மு.க. அழகிரி (திமுக) - 4,31,295
பி.மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 2,90,310
கவியரசு (தேமுதிக) - 54,419
வெற்றி வாக்கு வித்தியாசம் - 1,40,985
2004 மதுரை மக்களவைத் தேர்தல் முடிவுகள்:
பி.மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) - 4,14,433
ஏகே போஸ் (அதிமுக) - 2,81,593
வெற்றி வாக்கு வித்தியாசம் - 1,32,840












Click it and Unblock the Notifications