மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் "அந்த" 3 பேருக்கு என்ன வேலை? கேமராவில் ஷாக்கான போலீஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஏஐ தொழில்நுட்ப சிசிடிவி கேமராவில் சிக்கிய பழைய குற்றவாளிகள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் எதற்காக கும்பாபிஷேகத்திற்கு வந்தார்கல், ஏதேனும் நாசவேலைகளில் ஈடுபட வந்தனரா, இல்லை திருட்டு வேலைகளுக்காக வந்தனரா என்பதை விசாரிக்கிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக மதுரை மாநகர் காவல்துறை சார்பில் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

madurai police

பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூட்டத்திற்குள் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் யாரும் கூட்டத்திற்குள் வந்தால் அவர்களை கண்டறிய அதிநவீன தொழில்நுட்ப AI தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதில் பல்வேறு வழக்குகளை பெறக்கூடிய குற்றவாளியின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த காட்சிகள் பதிவாகும் பகுதியில் பழைய குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் யாரும் கடந்து சென்றால் அவர்கள் குறித்த தகவல்களை மதுரை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் பகிரப்படும்.

அதன் அடிப்படையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்த பிரசாத் என்ற பல வழக்குகளை தொடர்புடைய நபரும், தெற்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் நுழைந்த வசந்தகுமார் என்ற நபரும் அதேபோல் பெண் ஒருவரும் கோவிலுக்குள் சென்றது AI தொழில்நுட்பத்தின் பொருத்தப்பட்ட கேமரா வாயிலாக காவல்துறைக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்தில் எதற்காக கோவிலுக்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் வந்தார்கள் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து மதுரை மாநகர குற்றப் பிரிவு தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடந்தது என்ன?

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாவை ஒட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்ட நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக கடந்த 8.4.2009 அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் 11 முதல் 17-ஆம் தேதி வரை 12 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள் மற்றும் 56 யாகசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அம்மனுக்கு 33 யாக குண்டங்களும், சுவாமிக்கு 33 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

புனித நீர் கலசங்களில் நீர் நிரப்புவதற்காக புண்ணிய நதியான கங்கையிலிருந்து 1,008 லிட்டர் புனித நீரும், மேலும் 7 புண்ணிய நதிகளிலிருந்து 1,008 லிட்டர் புனித நீரும் கொண்டு வரப்பட்டிருந்தது. 9 வகையான தானியங்கள், மூலிகைப் பொடிகள், ஆலங்குச்சி, அரசங்குச்சி, பசுநெய் உள்ளிட்ட 96 வகையான ஹோமப் பொருட்களைக் கொண்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

யாகசாலை பூஜைகள் மற்றும் திருக்குட நன்னீராட்டு விழாவில் 300-க்கும் மேற்பட்ட பட்டர்கள் பங்கேற்று பூஜைகளை முன்நின்று நடத்தினர்.

இன்று காலை 7.40 மணிக்கு அருள்மிகு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு சமகால திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து காலை 7.55 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், காலை 8.10 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரருக்கும் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 5 லட்சம் டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோவில் முழுவதும் வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. திருக்கோவில் வளாகம், கோபுரங்கள், விமானங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வண்ண விளக்குகள் மற்றும் லேசர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

கோவில் மேற்கூரையில் நின்று திருக்குட நன்னீராட்டு விழாவை காண்பதற்காக 9,000 பேருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் மாசி வீதிகளில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

திருக்கோவில் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் 27 இடங்களில் 54 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. 70 மருத்துவர்கள், 150 மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட 275 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க 433 கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் 70 அதிநவீன FRS கேமிராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்றன. மதுரை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் 6,500 காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 40 குற்றத்தடுப்பு காவலர்கள் குழுவினர் கோவிலை சுற்றிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

C2 ரவுண்டானா, எல்லீஸ் நகர், TB ரோடு, வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல் உள்ளிட்ட 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மதுரையின் 51 முக்கிய சந்திப்புகளில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக 55 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னை, நெல்லை, போடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து மதுரைக்கு 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும், மதுரை மாநகரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

திருக்குட நன்னீராட்டு விழா நிறைவு பெற்றதைத் தொடர்ந்து காலை 10 மணி முதல் பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+