மதுரை மீனாட்சிய பார்க்கணும்! 10 நிமிஷம்தான் டைமு! Gate-ஐ உடைச்சிடுவோம்! கொந்தளிக்கும் பெண் பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: "10 நிமிஷத்துல , எங்களை உள்ளே விடாவிட்டால் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வோம்" என மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்கள் கொந்தளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய தினம் நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என தவெக அரசு மீது பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Madurai Meenakshi temple

கூட்டத்தை கட்டுப்படுத்த எந்த வித ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்றும் விஐபிக்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பெண் பக்தர்கள் கூறியிருப்பதாவது: நாங்கள் அதிகாலை 3.30 மணிக்கு வந்தோம்.

இப்போது வரை எங்களை உள்ளே விட வில்லை. நாங்கள் மீனாட்சி தாயை பார்க்கத்தானே வந்திருக்கோம். எங்களை விட்டுவிட்டு விஐபிக்களை மட்டும் உள்ளே அனுமதிக்கிறார்கள். பாஸ் இருப்போரை மட்டுமே போலீஸார் அனுமதிக்கிறார்கள்.

அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை. தண்ணீர் இல்லை, விஐபிக்களுக்காக பொதுமக்கள் கஷ்டப்பட வேண்டுமா, ஓட்டு போட்ட மக்கள் வெளியே காத்திருக்கிறார்கள், ஏசியில் உட்கார்ந்து வேலை பார்ப்போர் உள்ளே இருக்கிறார்கள்.

அவர்களை போல் நாங்களும் மனிதர்கள்தானே! மதுரை மீனாட்சியை பார்க்க எங்க இருக்கும் ஜனமும் வந்திருக்கிறார்கள். கோயில் என்றால் எல்லாருக்கும் சமம்தானே! தஞ்சாவூரில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு வந்தோம். இப்போது வரை உட்கார்ந்திருக்கிறோம்.

இன்னும் 10 நிமிடத்தில் எங்களை உள்ளே விடாவிட்டால் கேட்டை உடைச்சிடுவோம். போலீஸ் வந்தாலும் பார்த்துக்கலாம். எங்களை ஒன்னும் செய்ய முடியாது என கொந்தளித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவுக்கே உலகெங்கும் வாழும் மக்கள் வந்து செல்வது உண்டு. அந்த வகையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் மீது புனித நீர் கூட தெளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விழாவுக்காக எங்கெங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் அதிகாலை 2 மணி முதலே வரத் தொடங்கி சாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். 4 மாசி வீதிகளில் இருந்து விழாவை காண பொதுமக்களுக்கு போலீஸர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார்கள்.

நீண்ட காலத்திற்கு பிறகு நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வில் மதுரை முழுவதும் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கூட்டத்தை சமாளிப்பது பெரும் சவாலாகியுள்ளது.

இதுகுறித்து மேலும் சில பக்தர்கள் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் 2 மணியில் இருந்து காத்திருக்கிறார்கள். இதுவரை பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கவில்லை, பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்காமல் என்ன கும்பாபிஷேகம் நடத்துறீங்க! ஹெலிகாப்டரில் தீர்த்தம் தெளிப்பதாக சொன்னார்கள், அதையும் செய்யவில்லை.

இதை நாங்கள் டிவியிலேயே பார்த்து விட்டு போய்விடுவோமே, தீர்த்தம் தெளிக்காததற்கு நாங்கள் ஏன் 2 மணி முதல் வந்து உட்கார்ந்திருக்கணும்! தீர்த்தம் தெளிக்காமல் யாரும் இங்கிருந்து செல்ல மாட்டோம். ஒரு டம்ளர் தண்ணீர் கூட எங்கள் தெளிக்கப்படவில்லை. இவ்வாறு பக்தர்கள் கொந்தளிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+