மதுரையில் நிழலுக்கு ஒதுங்கிய இன்ஜினியர்.. திருமண மண்டபத்தில் பாட்டு சத்தம்.. எமனாக மாறிய ரோடு ரோலர்
மதுரை: மதுரை மேலமடை சந்திப்பு பகுதியில் மேம்பால கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் இரவு, பகலாக வேலை செய்து வருகிறார்கள். பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது இன்ஜினியர் ஒருவர் ரோடுரோலர் அருகே கீழ் பகுதியில் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில் திருமண மண்டபத்தில் பாடல்கள் அதிக சத்தத்துடன் ஒலித்தது. இதனால் கீழே உட்கார்ந்திருந்த இன்ஜினியருக்கு ரோடு ரோலர் எமனாக மாறியது.
சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத நிகழ்வுகள் வாழ்க்கையில் நடக்கும். சாலையில் வானத்தில் போய் கொண்டிருப்போம். அவ்வளவு நேரம் எடுக்காமல் அமைதியாக இருக்கும் டிரைவர், பின்னால் வாகனம் வருகிறதே என்று யோசிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே வேகமாக எடுப்பார்.. அப்படி எடுக்கும் போது விபத்து ஏற்படும். அதேபோல் வாகனம் அப்படியே நிற்கிறதே என்று வெயிலுக்கு ஒதுங்கினால் திடீரென அந்த நபர் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திவிடுவார். அந்த வகையில் வெயில் அதிகமாக இருக்கிறது என்று ஒதுங்க கூடாத இடத்தில் ஒதுங்கினால் நமக்கே தெரியாமல் தப்பு நடந்து விடும். அப்படித்தான் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை மேலமடை சந்திப்பு பகுதியில் மேம்பால கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் இரவு, பகலாக வேலை செய்து வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதாகும் கருப்பசாமி என்பவர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் வழக்கம் போல், கருப்பசாமி பணிக்கு வந்தார்.
பணிகள் நடந்தபோது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், அங்கு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த 'ரோடு ரோலர்' வாகனத்தின் கீழ்பகுதியில் கருப்பசாமி அமர்ந்து இருந்துள்ளார். அந்த ரோடு ரோலர் வாகனத்தின் ஆபரேட்டரான அசாம் மாநிலத்தை சேர்ந்த ரகுமான் திடீரென இயக்க முற்பட்டார். அப்போது, அதன் கீழ் பகுதியில் இருந்த கருப்பசாமி, ரோடு ரோலர் சக்கரத்தில் சிக்கிவிட்டார். இதில் அவரது தலை நசுங்கியது.
முன்னதாக அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பாடல் ஒலித்ததால், ஆபரேட்டர் ரகுமான், ரோடு ரோலரை இயக்கியபோது கருப்பசாமி கூச்சலிட்டது கேட்கவில்லை என சொல்லப்படுகிறது.. அங்கிருந்தவர்கள் கருப்பசாமி பலியாகிக்கிடந்ததை பார்த்து கூச்சலிட்டதால், உடனே ரோலரை நிறுத்திவிட்டு ஆபரேட்டர் ரகுமான் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதுகுறித்து அறிந்த, மாட்டுத்தாவணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய ஆபரேட்டர் ரகுமான், போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண மண்டபத்தில் வந்த பாட்டு சத்தம் ஒருபுறம், வெயில் அதிகமாக இருக்கிறது என்று ஒதுங்க கூடாத இடத்தில் ஒதுங்கியது போன்ற காரணத்தால் மதுரை இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications