பாஜக MLAவை தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம்.. ஃபட்னாவிஸ் பேச்சிற்கு ஸ்டாலின் கண்டனம்!
மதுரை: மதுரையில் பாஜக எம்எல்ஏவை தேர்ந்தெடுத்தால் தான் மெட்ரோ கொண்டு வருவோம் என்று பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேவேந்திர ஃபட்னாவிஸ் எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. நேற்றுடன் வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. கடைசி நாளில் பாஜகவின் அத்தனை வேட்பாளர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதேபோல் பாஜகவின் முக்கிய வேட்பாளர்களுடன் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

அந்த வகையில் மதுரை தெற்கு தொகுதியில் பாஜக நிர்வாகி ராம சீனிவாசன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பங்கேற்றார். இதன்பின் தேவேந்திர ஃபட்னாவிஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக அலை வீசுகிறது. நிச்சயமாக என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும்.
மதுரையில் ராம சீனிவாசன் எம்எல்ஏ-வாகிவிட்டால், உடனடியாக மதுரை மெட்ரோ கோரிக்கையை பிரதமர் மோடியிடம் கொண்டு செல்வோம். அதன்பின் உடனடியாக மதுரைக்கு மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். தேவேந்திர ஃபட்னாவிஸின் பேச்சிற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், பாஜக MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியை சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும் என்று பதில் அளித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications