மெட்ரோ ரயில் எப்போது ஓடும்.. மீனாட்சி சித்திரை தேரோட்டத்திற்கு சிக்கலா?.. மதுரையன்ஸ் இதை படிங்க
மதுரை: மேலமாசி வீதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மெட்ரோ ரயில் இயக்குனர் சித்திக் கூறியுள்ளார். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியதில் இருந்து 4 ஆண்டுகளில் நிறைவு பெறும் என்றும் சித்திக் தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்த மக்களுக்கு மின்சார ரயிலுக்கு அடுத்த படியாக மெட்ரோ ரயில் கை கொடுத்துள்ளது. இதனால் குறித்த நேரத்தில் பணிக்கு செல்லவும் பணி முடித்து வீடு திரும்பவும் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.

சென்னையை அடுத்து மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக மதுரையில் எந்த, எந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது என்பது குறித்து கள ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலமாசி வீதியில் இன்று ஆய்வு நடைபெற்றது.
மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட மேலாண்மை இயக்குனர் சித்திக் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை ஜூலை 15 ஆம் தேதி தமிழக முதலமைச்சரிடம் அளிக்கப்படும் என கூறினார்.
மெட்ரோ ரயில் திட்ட பணியால் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர். சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார். மதுரை மெட்ரோ ரயில் பாதைகளுக்கும், உயர்மட்ட மேம்பால பாதைக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை எனவும் கூறினார்.
ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 32 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த திட்டத்தில் 27 ரயில் நிலையங்கள் இடம்பெறும் என கூறினார். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கியதில் இருந்து 4 ஆண்டுகளில் நிறைவு பெற்று மெட்ரோ ரயில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சித்திக் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications