மணிக்கட்டை அறுத்து.. ரூமில் ஒரே நேரத்தில் தூக்கில் தொங்கிய குடும்பம்.. பரபர பின்னணி.. கலங்கிய மதுரை

2 மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்டதில் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன

Subscribe to Oneindia Tamil

மதுரை: மணிக்கட்டை அறுத்து கொண்டு.. ஒரே நேரத்தில் தாய், மகள்கள் என 3 பேரும் பெட்ரூமில் தூக்கில் தொங்கி உள்ளனர்.. மதுரையையே 2 நாட்களாக உலுக்கி வரும் இந்த தற்கொலை சம்பவத்தில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.

திருச்சியை சேர்ந்தவர் அருண்பாண்டியன்.. கட்டிட காண்டிராக்டராக இருந்திருக்கிறார்.. மனைவி வளர்மதிக்கு 38 வயதாகிறது.. இவர்களுக்கு அகிலா 20, பிரீத்தி 17, வயதில் மகள்கள் இருந்தனர்.. அகிலா மதுரை அரசு கல்லூரியிலும், பிரீத்தி 12-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

சில வருஷங்களுக்கு முன்பு அருணுக்கு உடம்பு சரியில்லாமல் போகவும், அது சம்பந்தமாக டாக்டரிடம் சென்றுள்ளனர்.. அப்போதுதான், அவருக்கு மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது.

 புற்றுநோய்

புற்றுநோய்

அந்த கட்டியை அகற்றினால் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்களாம்.. இதை கேள்விப்பட்டு குடும்பமே அன்றே வளர்மதி தற்கொலைக்கு முயன்றாராம்.. பிறகு விஷயம் தெரிந்து குடும்பத்தினர் அவரை காப்பாற்றினர்.

அருண்

அருண்

அதற்கு பிறகு, அனைவரும் குடும்பத்துடன் மதுரைக்கு அழைத்து வந்துள்ளனர்.. ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தில் எல்லாரும் ஒரு வீடு எடுத்து வசித்து வந்தனர்.. அங்கு அருணுக்கு புற்றுநோய்க்கு சிகிச்சையும் நடந்துள்ளது.. அது பலனளிக்காமல்தான் கடந்த ஜூலை மாதம் உயிரிழந்துள்ளார். அருண் இறந்தபிறகு வளர்மதி பித்து பிடித்தது போல இருந்திருக்கிறார்.

தற்கொலை

தற்கொலை

பிறகுதான் மகள்களுடன் தற்கொலைக்கு முடிவு செய்துள்ளார்.. மணிக்கட்டை அறுத்துக் கொண்டார். அப்படியும் உயிர் போகவில்லை என்றதும், சேலையில் ஒரே நேரத்தில் 3 பேரும் தூக்கில் தொங்கி உள்ளனர்.. தாங்கள் வளர்த்த நாய்க்கு சாப்பாட்டில் விஷம் வைத்ததுடன், அதன் கழுத்தையும் நெரித்தே கொன்றார்களாம்.. அதன்பிறகுதான் இவர்கள் லெட்டர் எழுதி வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

 பெண்கள் கண்ணீர்

பெண்கள் கண்ணீர்

ஆனால், இவர்கள் 3 பேருமே ஏற்கனவே ஒருமுறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து தூக்க மாத்திரையை சாப்பிட்டுள்ளனர்.. அப்போதும் உறவினர்கள்தான் காப்பாற்றி உள்ளனர். அப்பா இல்லாமல் இருக்கவே முடியவிலை என்று அந்த பெண்கள் அழுது கொண்டே சொல்வார்களாம். இப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, சாமி அறைக்கு போய் தாயும், 2 மகள்களும் பூஜை செய்தார்களாம்.. பிறகு, தங்கள் குடும்ப போட்டோவை எடுத்து வந்து அதேசாமி அறையில் வைத்து அதற்கு பூ, பொட்டு வைத்து பூஜை செய்துள்ளனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

பிறகு பெட்ரூமில் ஒரே நேரத்தில் தூக்கு போட்டு தொங்கி உள்ளனர்.. அளவுக்கு அதிகமாக ரத்தம் அவர்கள் கைகளில் இருந்து வெளியேறி இருக்கிறது.. ஒருவேளை தூக்கு போட்டு இறப்பது தாமதமானாலும் ரத்தம் வெளியேறி கண்டிப்பாக இறந்திருக்க வேண்டும் என்கின்றது போலீஸ் தரப்பு.. எனினும், இது சம்பந்தமாக, இன்னமும் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+