திமுகவின் உட்கட்சி பிரச்சினை.. மதுரை மாவட்ட மக்கள் பாதிப்பு.. ஆர்பி உதயகுமார் விமர்சனம்!
மதுரை: மதுரை மேயருக்கு எதிராக அமைச்சர் மூர்த்தி உண்ணாவிரதம் இருப்பேன் என சொல்லியது திமுகவின் நிர்வாக திறமையின்மையை காட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது.
குறிப்பாக ஐயர் பங்களா, ஜெய்ஹிந்த்புரம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை வெள்ள நீரை அகற்றாவிட்டால் மேயருக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்பி உதயகுமார் பேட்டி
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆர்பி உதயகுமார் கூறுகையில், மதுரையில் மேயரை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பதாக அமைச்சரே தெரிவித்திருப்பது திமுக ஆட்சியின் நிர்வாக குளறுபடிகளையே காட்டுகிறது. ஒரு அமைச்சரே, மேயரிடம் உண்ணாவிரதம் இருப்பேன் என கூறுவது ஏன் என தெரியவில்லை.

நிர்வாகம் செயல் இழப்பு
அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் நிர்வாகம் இருப்பதாக நாங்கள் நினைத்து கொண்டிருந்தோம். ஆனால் தன் கையில் நிர்வாகம் இல்லை எனும் இயலாமையை ஒப்புதல் வாக்குமூலமாக அமைச்சர் அளித்திருப்பதாகத் தெரிகிறது. அமைச்சரின் இயலாமையா, அரசியலா, உட்கட்சி விவகாரமா என தெரியவில்லை. மொத்தத்தில் நிர்வாகம் முடங்கி செயல் இழந்துள்ளது.

சட்டம் - ஒழுங்கு
திமுகவின் உட்கட்சிப் பிரச்சினையால் ஒட்டுமொத்த மதுரை மாவட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது திமுக நிர்வாகிகளின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது. வாடிப்பட்டி அதிமுக சேர்மன் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பது தெரிகிறது.

சாகும் வரை உண்ணாவிரதம்
இதுமட்டுமல்லாமல் மாணவர்கள், மாணவிகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எதிர்க்கட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை உள்ளது. காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிட்டால் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும். 30 நாள்களில் 50 கொலைகள் நடக்கிறது.
அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச மறுக்கிறார். மேயருக்கு எதிராக அமைச்சரே உண்ணாவிரதம் இருப்பதாக சொன்னால், மக்கள் சாகும் வரை உண்ணாவிரதம்தான் இருக்கவேண்டும். இப்படி இருந்தால், எதிர்க்கட்சிகள் என்ன செய்வது என தெரியவில்லை என்று தெரிவித்தார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications