குழந்தைகளுக்கு ஆபாசப் படம் காட்டிய வக்கிரம் பிடித்த கொத்தனார்... கைது செய்த போலீஸ்
Recommended Video
மதுரை: மதுரையில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் செல்போனில் ஆபாசப் படம் காட்டிய கொத்தனாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
எத்தனை கடுமையான தண்டனை கொடுத்தாலும் இந்த வக்கிரக்காரர்களின் அட்டூழியங்கள் நின்றபாடில்லை. எத்தனையோ இடங்களில் பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கியும் உள்ளனர். கடுமையான தண்டனைகளையும் சட்டம் கொடுக்கிறது. ஆனாலும் வக்கிர மனம் படைத்தோர் திருந்துவதாக இல்லை.

மதுரையில் ஒரு கொத்தனார் இளைஞர் அசிங்கமாக நடந்து இப்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது மர்ம நபர் ஒருவர் குழந்தைகளை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் தனது செல்போனில் இருந்த ஆபாசப் படங்களை அந்தக் குழந்தைகளிடம் காட்டியுள்ளனர். இதைப் பார்த்து மிரண்ட குழந்தைகள் அங்கிருந்து ஓடி வீட்டுக்குச் சென்று பெற்றோர்களிடம் கூறியுள்ளன. இதைக் கேள்விப்பட்டு அதிர்ந்த பெற்றோர் உடனடியாக அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தனர்.
அப்போது கொத்தனார் வேலைக்காக வாடிப்பட்டி பகுதியில் இருந்து வந்த சுரேஷ் என்பவர் தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர்கள் அளித்த புகாரை தொடர்ந்து கொத்தனார் சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த எஸ்எஸ் காலனி காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications