மதுரை காவல் நிலைய மரணம்: காலை 5.58 மணிக்கு பாலகிருஷ்ணன் கழிப்பறைக்கு செல்லும் CCTV காட்சி வெளியானது!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணமடைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் காவல் நிலையத்தில் இருப்பதும், கழிப்பறைக்குச் செல்வதும் இடம்பெற்றுள்ள சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே டி. அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். மதுரை அவனியாபுரத்தில் ஒரு கொரியர் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கண்டெய்னர் லாரி ஓட்டுநராக அவர் பணியாற்றி வந்தார்.

Madurai Police Station Death CCTV Footage Shows Lorry Driver Before Tragedy

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் இருந்து ஏலக்காய் மூட்டைகள் மற்றும் இதர பார்சல் பொருட்களை ஏற்றிக்கொண்டு பாலகிருஷ்ணன் மதுரை நோக்கிச் சென்றபோது உசிலம்பட்டி - தேனி சாலையில், வாலாந்தூர் சுடுகாடு அருகே அதிகாலை சுமார் 2.30 மணியளவில் லாரியில் தீப்பிடித்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் தீயை அணைத்தனர்.

இந்தத் தீ விபத்தில் லாரியில் இருந்த ஏலக்காய் மூட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. பாலகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற லாரி தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அந்த லாரியில் ஏற்றப்பட்டிருந்த ஏலக்காய் மூட்டைகளில் 67 மூட்டைகள் குறைவாக இருப்பதாகவும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவிகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறையிடம் கொரியர் நிறுவனம் புகார் அளித்திருந்தது.

இந்தப் புகார் தொடர்பான விசாரணைக்காக மதுரை செக்கானூரணி காவல் நிலையத்துக்கு வந்திருந்த பாலகிருஷ்ணன், கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

காலை சுமார் 6 மணியளவில் காவல் நிலைய கழிப்பறைக்குச் சென்ற பாலகிருஷ்ணன், கழிவறையில் தற்கொலைக்கு முயன்று மயக்க நிலையில் இருந்தார் என்றும், அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

பாலகிருஷ்ணனின் உயிரிழப்பு தொடர்பாகச் செக்கானூரணி பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்ட அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் குறித்த உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்றும், இதற்கு பொறுப்பான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

முந்தைய நாள் இரவு தனது மனைவியிடம் போனில் பேசியுள்ளார் பாலகிருஷ்ணன். இரவு வரை தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன், மறுநாள் காலையில் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

காலை 5.58 மணிக்கு பாலகிருஷ்ணன் மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன், காவல் நிலையத்தில் சேரில் அமர்ந்திருப்பது போலவும், அவர் எழுந்து கழிப்பறைக்குச் செல்வது போலவும், சிறிது நேரத்தில் அங்கிருந்த பெண் காவலர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+