Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

X பதிவால் வந்த சிக்கல்.. "எப்படி அப்படி சொன்னீங்க?” அர்ஜுன் சம்பத்துக்கு மதுரை போலீஸ் சம்மன்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: குடும்பத்தகராறு காரணமாக நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சட்டம் ஒழுங்கு பிரச்னை போல சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் அவர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள விக்கிரமங்கலம் கீழப்பட்டியைச் சேர்ந்த சுமதி என்பவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார். இந்த சூழலில் சொத்து பிரச்சனை தொடர்பாக அவரது கணவர் குடும்பத்திற்கும், சுமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக சுமதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

Madurai police summons Arjun sampath for social media post

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் தீயை அணைத்ததோடு வீட்டிற்குள் காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த சுமதியை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுத்தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை மேற்கோள் காட்டி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது சமூக வலைதள பக்கத்தில், குண்டு வீச்சு, கள்ளத் துப்பாக்கி, வீச்சரிவாள், கத்தி பெருகிவரும் ஆயுத கலாச்சாரம்; சீரழிந்து வாழும் சட்டம் ஒழுங்கு; திமுக ஆட்சியில் அச்சத்தில் மக்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் குடும்பப் பிரச்சனையால் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து அரசு மீது குற்றம்சாட்டி அவதூறாக பதிவிட்டதாக அர்ஜுன் சம்பத்துக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. குடும்பத் தகராறு பிரச்சனையை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என பதிவிட்டது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நாளை செக்கானுரணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+