என்டிஏ ஆதரவு.. அமைப்பாய் இணையாத செளராஷ்டிரா மக்கள்.. மதுரை அரசியலில் தாக்கம் செலுத்துவார்களா?
மதுரை: என்டிஏ கூட்டணிக்கு செளராஷ்டிரா சமூக மக்கள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக செளராஷ்டிரா முன்னேற்ற கழகம் அறிவித்திருக்கிறது. மதுரையில் மட்டும் செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த 2 லட்சம் வாக்காளர்கள் வசித்து வரும் சூழலில், அவர்கள் ஆதரவு என்டிஏ கூட்டணிக்கு பலன் கொடுக்குமா என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் முக்குலத்தோர் சமூக மக்களுக்கு பின், நகர்ப் பகுதிகளில் செளராஷ்டிரா மொழி பேசும் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அதிலும் மதுரை தெற்கு, மதுரை வடக்கு மற்றும் மதுரை மத்திய தொகுதிகளில் செளராஷ்டிரா மக்கள் பலரும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே செளராஷ்டிரா மக்கள் மத்தியில் அரசியல் அதிகாரம் குறித்த பேச்சுகள் எழுந்துள்ளன.

செளராஷ்டிரா முன்னேற்ற கழகம்
இதன் காரணமாக 2 மாதங்களுக்கு முன்பாக செளராஷ்டிரா மாநாடு நடத்தப்பட்டது. இதில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாகவே செளராஷ்டிரா மக்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வந்தனர். இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் செளராஷ்டிரா மக்கள் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று செளராஷ்டிரா முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.
இதனால் திமுக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. செளராஷ்டிரா மக்களை பொறுத்தவரை மதுரையில் தொழில் ரீதியாக இணைந்துவிட்டனர். ஆனால் இன்னும் அரசியல் ரீதியாகவே இணையவில்லை என்றே பார்க்கப்படுகிறது. அதேபோல் மதுரையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து செளராஷ்டிரா மக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
மதுரை தெற்கு தொகுதி
ஆனால் மதுரை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் கோபிசன், நாதக வேட்பாளர் சுமதி ஆகிய இருவருமே செளராஷ்டிரா சமூகத்தினர் தான். இந்த தொகுதியில் மட்டும் சுமார் 33 ஆயிரம் செளராஷ்டிரா மொழி பேசும் வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். இதன் மூலமாகவே செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக மாறி இருக்கின்றனர்.
முக்குலத்தோர் மற்றும் இஸ்லாமியர்களை விடவும் அதிக எண்ணிக்கையில் செளராஷ்டிரா மக்கள் இருக்கிறார்கள். அதேபோல் சிட்டிங் எம்எல்ஏ பூமிநாதன் மீது செளராஷ்டிரா மக்களிடையே பெரிய அதிருப்தி கிடையாது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக செளராஷ்டிரா மக்களுடன் ராம ஸ்ரீனிவாசன் நெருக்கம் காட்டி வந்தார். பிறந்தநாளினை கூட செளராஷ்டிரா மக்களுடன் தான் கொண்டாடினார்.
ராம ஸ்ரீனிவாசனின் திட்டம்
ஆனால் தெலுங்கு நாயக்கர் சமூக என்பதால், ராம ஸ்ரீனிவாசனுக்கு முக்குலத்தோர் மற்றும் பிற சமூகங்களின் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அதேபோல் மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு செளராஷ்டிரா மக்களிடையே நல்ல பெயர் இருக்கிறது. மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள செளராஷ்டிரா மக்கள் பிடிஆர் ஆதரவாளர்கள் என்றே சொல்லலாம்.
மதுரை வடக்கு தொகுதியை பொறுத்தவரை அண்ணா நகர், வண்டியூர், புதூர், செளராஷ்டிராபுரம் உள்ளிட்ட பகுதியில் செளராஷ்டிரா மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தொகுதியில் திமுக சார்பாக தளபதி மற்றும் அதிமுக சார்பாக சரவணன் போட்டியிடுகின்றனர். ஆனால் செளராஷ்டிரா வாக்குகளை விடவும் முக்குலத்தோர் வாக்குகள் அதிகமிருக்கிறது.
விஜய்க்கு ஆதரவு
அதுமட்டுமல்லாமல் செளராஷ்டிரா இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலரும் விஜய்க்கு வாக்களிப்பார்கள் என்று தெரிகிறது. இது மதுரையில் நடந்த தவெக மாநாட்டிலேயே உணரப்பட்டது. 40 வயதிற்கு மேலானவர்கள் மட்டுமே என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் செளராஷ்டிரா மக்கள் இதுவரை ஒன்றாக இணைந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் கூட ஈடுபட்டதில்லை.
இதனால் செளராஷ்டிரா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அந்த மக்கள் கட்டுப்படுவார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் செளராஷ்டிரா முன்னேற்ற கழகம் என்டிஏ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும், அது களத்தில் பிரதிபலிக்குமா என்ற எண்ணம் களத்திலும் நிலவி வருகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications