மதுரை காவல் நிலையத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த வழக்கில் திருப்பம்! காவல் மரணம் என சிபிசிஐடி வழக்கு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் காவல் மரனம் என்று என்று சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பாலகிருஷ்ணனின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்த நிலையில் சிபிசிஐடி அதிரடி முடிவினை எடுத்துள்ளது.

தேனி உத்தமபாளையம் அருகே டி அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 42). இவர் ஏலக்காய் மூடைகளை ஏற்றி வந்த வாகனம் தீ விபத்துக்குள்ளானது. இது தொடர்பான விசாரணைக்காக மதுரை செக்கானூரணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பாலகிருஷ்ணன் போலீஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் தனது சட்டையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இது தமிழகத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

Madurai Sekkanurani Police Station Death CB-CID Register case as lock up death

உடலை வாங்க மறுத்து உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சிபிசிஐடிக்கு இந்த வழக்கு விசாரணையானது மாற்றப்பட்டது. பின்னர் செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, தலைமைக்காவலர் பழனிவேல் ராஜன், பெண் காவலர் கலைச்செல்வி ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். எப்படி உயிரிழந்தார் என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையிலேயே தெரியவரும் என கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று பாலகிருஷ்ணனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது. இதில் அவரது உடலில் 5 இடங்களில் ரத்தக்கசிவு காயம் இருந்தது தெரியவந்தது. கழுத்தின் இடது பக்கம் சாய்வான கயிறு தடம், வலது பக்கம் 3 சிராய்ப்பு காயங்களும் இருந்தன. கழுத்தின் வலதுபுறம் ஊசி குத்தியது போன்ற 3 அடையாளங்ள் இருந்ததாகவும், முதுகு பகுதியில் நீல நிற ரத்தக்கசிவு காயம் இருந்ததாகவும், மூளை 1,400 கிராம் எடையுடன் கூடுதல் வீக்கமாகவும் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதே போன்று பாலகிருஷ்ணனின் இதயம் 358 கிராம் வீக்கமாகவும், இடது முழங்கால் மற்றும் இடது கையில் சிராய்ப்பு காயங்களும் இருந்துள்ளது. நுரையீரலில் சிறிய ரத்தக்கசிவு தென்பட்டுள்ளன. இந்நிலையில் பிரேதப் பரிசோதனை முடிவுகளை அடுத்து சிபிசிஐடி போலீசார் காவல் மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+