மதுரையை மையம் கொண்ட அரசியல் கட்சிகள்.. எம்ஜிஆர் முதல் விஜய் வரை மதுரை சென்டிமென்ட்.. பின்னணி என்ன?
மதுரை: மகாத்மா காந்தி.. காமராஜர் என நூற்றாண்டு காலமாக அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திய மதுரையில் தனது தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டை நடத்தப்போகிறாராம் விஜய். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த எம்ஜிஆர் முதல் தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள விஜய் வரைக்கும் மதுரையை மையமாக வைத்தே அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
மீனாட்சி அரசாளும் மதுரை: பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட நகரம் மதுரை. மீனாட்சியும் சொக்கநாதரும் ஆட்சி புரியும் மதுரையம்பதி புராண கால சிறப்பு கொண்டது. சிவபெருமானும் பார்வதியும் மண்ணுலகில் ஆட்சி செய்த இடம் மதுரை. மீனாட்சியை கரம்பிடிக்க கயிலாயத்தில் இருந்து சிவபெருமான் மதுரைக்கு வந்தார் என்கிறது புராணம்.

திருவிளையாடல்: சிவபெருமான் தனது பல திருவிளையாடல்களை மதுரையில் நிகழ்த்தியுள்ளார். இன்றைக்கும் ஆவணி மூலத்திருவிழாவில் நரியை பரியாக்கும் திருவிளையாடல் தொடங்கி புட்டுக்கு மண் சுமந்த லீலைவரை அரங்கேற்றப்படுகிறது. சிவபெருமான் கட்டிய இம்மையில் நன்மை தருவார் திருக்கோயில் உள்ளதும் மதுரையில்தான்.
மதுரையை மையம் கொண்ட அரசியல்: முக்கிய கட்சிகள் அனைத்தும் மதுரையை மையமாகக் கொண்டே தங்களின் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளன. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை அரசியல் சரித்திரங்களை அரங்கேற்றும் பூமியாகவும் காலம் காலமாக இருந்து வருகிறது.
மகாத்மா காந்தி: கடந்த 1921 செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த மகாத்மா காந்தி மதுரை மண்ணில்தான் அரையாடையை அணியத் தொடங்கினார். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய அரசியல் நிகழ்வுகளை தீர்மானிக்கும் நகராக மதுரை இருந்து வருகிறது.
காமராஜர்: கடந்த 1945ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தமிழக தலைவரை தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருந்தது. அப்போது மதுரை திருப்பரங்குன்றத்தில்தான் காங்கிரஸ் செயற்குழு கூடி காமராஜரை தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவராக தேர்வு செய்தது. காமராஜருடைய மிகப்பெரிய அரசியல் வளர்ச்சிக்கு இந்த திருப்பரங்குன்றம் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.
எம்ஜிஆர்: மதுரையில் அரசியல் பயணத்தைத் தொடங்கினால் வெற்றிபெறலாம் என்ற சென்டிமென்ட் உருவாக காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். ஆரம்ப காலத்தில் அவரது அரசியல் வளர்ச்சி மதுரையை மையமாகக் கொண்டே இருந்தது.
1950களில் முதலாவது எம்ஜிஆர் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டதும் இதே மாமதுரை மண்ணில்தான். 1974ஆம் ஆண்டு தமது கொள்கையே அண்ணாயிசம் என எம்ஜிஆர் அறிவித்ததும் மதுரையில்தான்.
முதல் வெற்றி: அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் முதன் முதலாக இடைத் தேர்தலை எதிர்கொண்டு வென்றது அப்போதைய மதுரை மாவட்டத்தின் திண்டுக்கல் லோக்சபா தொகுதிதான். திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆரின் வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார். இப்படி எம்ஜிஆருக்கும், மதுரைக்கும் இடையே நிறைய அரசியல் தொடர்புகள் உண்டு.
ஜெயலலிதா: கடந்த 1981ஆம் ஆண்டில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது மதுரையில் 5-வது உலக தமிழ் மாநாடு நடந்தது. சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதா அந்த மாநாட்டில் கலந்து கொண்டார். அன்று அவருக்கு கிடைத்த வரவேற்பு அவருக்கு அரசியல் ஆசையை தூண்டி விட்டது. அதன்பிறகுதான் அவர் எம்ஜிஆர் அழைப்பின் பேரில்ங அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து, பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அளவிற்கு உயர்ந்தார்.
விஜயகாந்த்: தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கியதும் மதுரையில்தான். தமிழக அரசியலில் மாபெரும் சக்திகளான கருணாநிதியும் ஜெயலலிதாவும் உயிருடன் இருந்த போது மதுரை மண்ணின் மைந்தரான விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கி திமுக மற்றும் அதிமுகவின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாகவும் அரசியலில் வளர்ச்சிபெற்றார்.
மநீம கமல்ஹாசன்: கடந்த 2018ஆம் ஆண்டு கமல்ஹாசனும் அரசியல் கட்சியை மதுரை மண்ணில்தான் தொடங்கினார். கமல்ஹாசன் தன்னுடைய புதிய கட்சியான மக்கள் நீதி மய்யத்தை மதுரை ஒத்தக்கடையில்தான் தொடங்கினார். லோக்சபா, சட்டசபை தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதத்தை பெற்றுள்ளது மக்கள் நீதிமய்யம்.
டிடிவி தினகரன்: கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் டிடிவி.தினகரனும் மதுரை மேலூரில் தனது புதிய அமைப்பின் பெயர், கொடியை அறிமுகப்படுத்தி பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
விஜய் அரசியல்: அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளவர் நடிகர் விஜய். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சு உள்ளது. அதற்கேற்ப விஜய்யின் படங்களிலும் அரசியல் வசனங்கள் தவறாது இடம் பெறுகின்றன. தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வாசகம் இடம் பெற்றது.
அரசியல் வசனங்கள்: கத்தி, மெர்சல், சர்க்கார் என அடுத்தடுத்த படங்களிலும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றன. ஆடியோ வெளியீட்டின் போது அரசியல் திட்டம் குறித்துத் தொடர்ந்து மறைமுகமாக வெளிப்படுத்தி வருபவர் விஜய். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளின் போது அவரது ரசிகர்கள் ஒட்டும் வாழ்த்து போஸ்டரில் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுப்பார்கள்.
விஜய் அரசியல் கட்சி: கடந்த ஆண்டு முதலே அரசியல்ரீதியான நிகழ்வுகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்த நடிகர் விஜய், கடந்த 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். விஜய்யின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மதுரையில் மாநாடு: உள்ளாட்சித் தேர்தலில் ஆழம் பார்த்த விஜய், அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை மையமாக வைத்துதான் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு பிறந்த நாளில் போது மதுரையில் போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள், '2024 பாராளுமன்றமே, 2026ன் தமிழக சட்டமன்றமே ' விரைவில் மதுரையில் மாநாடு என்று போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
மதுரை சம்பவம்: இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தனது தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்திரை மாதத்தில் சிறப்பாக சம்பவம் செய்ய காத்திருக்கின்றனர் மதுரை ரசிகர்கள்.
-
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications