கடவுளே.. ஸ்கூல் மாணவிகளா இப்படி.. அதுவும் பஸ் ஸ்டான்டில் போய்.. மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் பயங்கரமாக சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கில் பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்து ஏறுவது உண்டு. வெளியே இருக்கும் லோக்கல் பேருந்துகளை பிடிக்க இங்கே மாணவ, மாணவிகள் பலர் வருவதுண்டு.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர் இரு குழுவாக மாறி மாறி சண்டையிட்டுக்கொண்டனர். மாலை நேரத்தில் அங்கு மாணவிகள் சிலர் நின்று கொண்டு இருந்த போது திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாறி மாறி கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதை அங்கிருந்த பெரியவர்கள் சிலர் சமாதானம் செய்ய முயன்றனர்.

சண்டை
ஆனாலும் அதை எல்லாம் மாணவிகள் சட்டை செய்து கொள்ளாமல் தொடர்ந்து மாறி மாறி வார்த்தை போரில் ஈடுபட்டனர். நேரம் செல்ல செல்ல இது கைகலப்பாக மாறி சண்டையில் முடிந்தது. மாணவிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி கொண்ட நிகழ்வின் காரணமாக பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் முடியை பிடித்து இழுத்து சண்டை போட்டுக்கொண்டனர். முதலில் இரண்டு மாணவிகள் மட்டுமே சண்டை போட்ட நிலையில் நேரம் செல்ல செல்ல சண்டை பெரிதானது.

கடும் மோதல்
பல மாணவிகள் சண்டையில் சேர்ந்து கொண்டு மாறி மாறி தாக்கிக்கொண்டனர். பள்ளி மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பேருந்து நிலையத்தில் வைத்து சண்டையிட்டு கொண்ட நிகழ்வு குறித்த காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது. இந்த நிலையில் திடீர் நகர் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் சம்பவம்
சமீப காலமாக பள்ளி மாணவ மாணவிகளின் இதுபோன்ற செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதை இதுபோன்ற நிகழ்வுகள் எடுத்துரைக்கிறது. சமீபத்தில் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் அரசு கல்லூரி மாணவிகள் அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலையிலேயே படுத்து உருண்டு.. தலை முடியை பிடித்து இழுத்து தாக்கிக்கொண்டனர்.இது தொடர்பாக மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காதல் விவகாரம் காரணமாக சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications