தனிஷ்க் மீனாட்சி உண்மையில் நிரபராதியா? காதலியை காப்பாற்ற.. கொள்ளையன் நிஷாந்த் ஆடும் மைண்ட் கேம்?

Subscribe to Oneindia Tamil

மதுரை: தனிஷ்க் கொள்ளை வழக்கில் மீனாட்சியை காப்பாற்ற நிஷாந்த் தீவிரமாக முயன்று வருகிறாராம். அவர் தற்போது போலீஸ் காவலில் உள்ள நிலையில் என்ன வாக்குமூம் கொடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியான 25 வயது யூடியூபர் நிஷாந்த் நீதிமன்றம் மற்றும் செய்தியாளர்கள் முன்பு பேசியுள்ள வார்த்தைகள் இப்போது புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

Tanishq gold

தனது காதலியும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மீனாட்சியை இந்த வழக்கிலிருந்து முழுமையாகக் காப்பாற்றி ஜாமீனில் வெளியே கொண்டு வருவதற்காக, நிஷாந்த் திட்டமிட்டு மைண்ட் கேம் ஆடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீதிமன்றத்திலும், மீடியா முன்பும் நிஷாந்த் சொன்ன வார்த்தைகள்

நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிஷாந்தை, மேல் விசாரணைக்காக 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது, நிஷாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதி முன்பும், பின்னர் நீதிமன்றத்திலிருந்து போலீஸ் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது கிடைத்த ஒரு நொடி நேரத்தில் செய்தியாளர்களைப் பார்த்தும் நிஷாந்த் சத்தமாகப் பேசினார். என் தந்தை சுரேஷுக்கும், மீனாட்சிக்கும் இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

ஆரம்பம் முதலே மாற்றிப் பேசும் நிஷாந்த்

தர்மபுரியில் கைது செய்யப்பட்டு மதுரைக்கு அழைத்து வரப்பட்ட போதே, நிஷாந்த் இதே பாணியிலான வாக்குமூலத்தைத்தான் கொடுத்திருந்தார். காதலி மீனாட்சி புதிதாகக் கட்டி வரும் வீட்டிற்குப் பணம் தேவைப்பட்டதால்தான் கொள்ளையடித்ததாக முன்பு கூறப்பட்ட நிலையில், நிஷாந்த் அதை மறுத்து, என் யூடியூப் சேனலை வளர்க்கவும், அப்பா கடனை அடைக்கவும்தான் கொள்ளையடித்தேன் எனப் பழியைத் தன் மீது போட்டுக்கொண்டார்.

இப்போது நீதிமன்ற வளாகத்திலும் செய்தியாளர்கள் முன்பும், மீனாட்சிக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் மீண்டும் அழுத்திச் சொல்லியிருப்பது, மீனாட்சிக்கு எளிதில் ஜாமீன் கிடைக்க உதவும் வகையில் போடப்படும் கணக்காகப் பார்க்கப்படுகிறது.

ஆதாரங்கள் சொல்வது என்ன?

நிஷாந்த் இவ்வாறு மீனாட்சியைக் காப்பாற்ற முயற்சித்தாலும், இந்த வழக்கில் மீனாட்சிக்குத் தொடர்பு இருப்பதற்கான முக்கிய ஆதாரங்களை போலீசார் ஏற்கனவே திரட்டியுள்ளனர்.

கொள்ளை நடப்பதற்கு முன்பு நகைக்கடையை நோட்டமிடச் சென்றபோதும், கொள்ளை நடந்த இரவிலும் மீனாட்சியின் இருசக்கர வாகனத்தையே நிஷாந்த் பயன்படுத்தியுள்ளார். கொள்ளைக்கு முன்பும் பின்பும் நிஷாந்தும் மீனாட்சியும் செல்போனில் பேசிய உரையாடல்கள் மூலம், மீனாட்சிக்குத் தெரிந்துதான் கொள்ளை நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையரே தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, கைது செய்யப்பட்ட மீனாட்சி அடையாளம் காட்டிய இடத்திலிருந்துதான் மாடக்குளம் கண்மாய் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ தங்க நகைகளைப் போலீசார் முதலில் மீட்டனர்.

1 நாள் போலீஸ் காவலில் தீவிர விசாரணை

இருதரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை நீதிமன்றம், நிஷாந்தை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும், விசாரணையின் போது அவரைத் துன்புறுத்தக் கூடாது என்றும், வழக்கறிஞரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

சேலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், தப்பிச் செல்ல உதவிய மர்ம நபர்கள் மற்றும் கொள்ளையடித்த விதம் குறித்து இந்த ஒரு நாள் காவலில் போலீசார் துருவித் துருவி விசாரிக்க உள்ளனர். காதலி மீனாட்சியைக் காப்பாற்ற நிஷாந்த் ஆடும் இந்த 'மைண்ட் கேம்' நீதிமன்றத்தில் எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+