சாத்தானை வழிபடும் தனிஷ்க் நிஷாந்த்? Demon Inside My Head டி-சர்ட்.. கிளம்பிய புது சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11.7 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளியான 25 வயது யூடியூபர் நிஷாந்த் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் புகைப்படம் ஒன்று தற்போது பெரிய பிரச்சனையாகி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் தனியார் பேருந்தில் தப்பிச் சென்றபோது ஓட்டுநர் கொடுத்த தகவலின் பேரில் சிக்கிய நிஷாந்தை, போலீசார் மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த நிலையில், நிஷாந்தை போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளன.

கவனத்தை ஈர்த்த "Demon Inside My Head" டி-சர்ட்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நிஷாந்தை போலீசார் அழைத்து வந்தபோது, அவர் அணிந்திருந்த டி-சர்ட்டில் ஆங்கிலத்தில் "Demon Inside My Head" என்று எழுதி இருந்தது. அதன் அர்த்தம் என் தலைக்குள் சாத்தான் இருக்கிறான் என்பதாகும்.

ஒரு நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதாகி நீதிமன்றத்திற்குச் செல்லும் குற்றவாளி, இப்படியொரு வாசகம் கொண்ட டி-சர்ட்டை அணிந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Madurai tanishq heist prime suspect nishanth s demon inside my head t-shirt

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பரவிய உடனேயே, நெட்டிசன்கள் நிஷாந்தின் பழைய இன்ஸ்டாகிராம் கணக்கையும், அவரது வாழ்க்கை முறையையும் தோண்டி எடுத்துப் பல்வேறு ஊகங்களைக் கிளப்பி வருகின்றனர்.

கருப்பு உடை, ஹெல்மெட் புகைப்படங்களும் புது சந்தேகங்களும்

ஏற்கனவே நிஷாந்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்தவர்களுக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. இந்தியாவின் பல மாநிலங்களுக்குப் பைக்கில் பயணம் செய்த நிஷாந்த், தனது பக்கத்தில் ஒருமுறை கூடத் தனது முகத்தை வெளிப்படையாகக் காட்டியதே இல்லை.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் தலைமுதல் கால் வரை கருப்பு நிற உடைகள் மற்றும் கருப்பு ஹெல்மெட் அணிந்தபடியான புகைப்படங்கள் மட்டுமே நிறைந்துள்ளன. தற்போது நீதிமன்றத்திற்கு வந்தபோதும் 'என் தலைக்குள் ஒரு சாத்தான் இருக்கிறான்' என்ற வாசகம் கொண்ட டி-சர்ட்டை அவர் அணிந்திருந்ததால், பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

இவரது இன்ஸ்டா பக்கம் முழுவதும் கருப்பு உடை, முகத்தை மறைக்கும் ஹெல்மெட் போட்டோக்கள் மட்டுமே உள்ளன. இப்போது நீதிமன்றத்திற்கு வரும்போதும் இப்படியொரு வாசகம் கொண்ட டி-சர்ட் அணிந்திருக்கிறார். இவர் ஏதேனும் வித்தியாசமான மனநிலை கொண்டவரா? அல்லது தீய சக்திகள், சாத்தான் வழிபாடுகள் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவரா? எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெறும் ஃபேஷனா?

மறுபுறம், இது குறித்துப் பேசும் பலர், இன்றைய இளைஞர்கள் மத்தியில் கருப்பு நிற உடைகள் அணிவதும், பைக் ரைடிங் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து புகைப்படம் எடுப்பதும் சாதாரண ஃபேஷன் என்றும் கூறுகிறார்கள்.

கடைகளில் விற்கப்படும் சாதாரண பிரிண்டட் டி-சர்ட்டைத்தான் அவர் அணிந்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

இருப்பினும், காதலி மீனாட்சியின் வீடு கட்டும் ஆசையை நிறைவேற்றவும், கடனை அடைக்கவும் துல்லியமாகத் திட்டமிட்டுக் கொள்ளையடித்த நிஷாந்த், இப்போது டிசம்பர் 1-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுமையாக மீட்கப்பட்டுவிட்ட நிலையில், நிஷாந்தின் இந்த வினோதமான உடை இணையத்தில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+