Tanishq நகைக் கடையில் ரூ 21 கோடி நகைகள் கொள்ளை! சிசிடிவியில் வெளியான புதிய டிவிஸ்ட்! போலீஸ் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தனிஷ்க் நகைக் கடையில் ரூ 21 கோடி மதிப்புள்ள 15 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சிசிடிவியை ஆய்வு செய்த போது ஒரு புதிய திருப்பம் வெளியாகியுள்ளது.

மதுரை பழங்காநத்தம்- காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் தனிஷ்க் ஜுவல்லர்ஸின் புதிய ஷோரூம் உள்ளது. இந்த கடை திறக்கப்பட்டு 15 நாட்களாகின்றன. இது 3 தளங்களை கொண்டது.

Madurai Tanishq jewellery

தரைதளத்தில் வாகன நிறுத்துமிடமும், முதல் தளத்தில் தங்கம், வெள்ளி நகைகள் விற்பனையகம், 2-ஆம் தளத்தில் வைர நகைகள் விற்பனையகமும், 3 ஆம் தளத்தில் நகைகளை பாதுகாக்கும் பெட்டகங்களும் அமைக்கும் வகையில் கட்டடப் பணிகள் தொடங்கின.

கட்டுமான பணிகள்

இந்த கடையின் கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவடையவில்லை. 70 சதவீத பணிகள் முடிந்த நிலையில் 30 சதவீத பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கடையின் பின்பக்கத்தில் இரும்புச் சாரம் அமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் நகைகளை வாங்குவார்கள் என்பதால் தனிஷ்க் கடையில் ஏராளமான புது டிசைன்களில் நகைகள் வந்திறங்கின. தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் நேற்று முன் தினம் விற்பனையை முடித்துக் கொண்டு கடை ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர்.

நகைக் கடையில் அதிர்ச்சி

இதையடுத்து நேற்று காலை 9.30 மணியளவில் நகைக் கடையை திறந்தனர். அப்போது முதல் தளத்தில் விற்பனைக்காக ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த நகை பெட்டிகள் காலியாக ஆங்காங்கே சிதறியிருந்தன.

15 கிலோ தங்கம்

இதையடுத்து எஸ்.எஸ்.நகர் காவல்நிலையத்திற்கு நகைக் கடை ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து மதுரை மாநகர கமிஷனர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு சுமார் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

ரூ 21 கோடி நகைகள் கொள்ளை

தங்க நகைகளுடன் வைர நகைகளும் காணாமல் போயுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ 21 கோடி என சொல்லப்படுகிறது. இந்த கடையில் பதிவான தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் நேற்று அதிகாலை 3 மணிக்கு உடல் முழுவதும் கருப்பு துணியை சுற்றிக் கொண்டு, முகமூடி, கிளவுஸ் அணிந்திருந்த ஒருவர் கடையில் இருந்து நகைகளை அள்ளிச் சென்ற காட்சிகள் இருந்தன.

எதுவும் உடையலையே

கடையில் கொள்ளையை நடத்த எந்த கண்ணாடிகளும் ஜன்னல்களும் உடைக்கப்படவில்லை. இரும்பு சாரம் வழியாக மொட்டை மாடிக்கு சென்ற கொள்ளையன், லிப்ட் அமைக்கும் பணிக்கு போடப்பட்டிருந்த கயிற்றை பிடித்துக் கொண்டு அந்த பாதை வழியாகவே முதல் தளத்திற்கு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

1 மணி நேரம்

மேலும் அந்த தளத்தில் விற்பனைக்காக வைத்திருந்த நகைகளை ஒரு மணி நேரமாக பார்த்து பார்த்து செலக்ட் செய்து ஒரு பையில் போட்டுக் கொண்டு எந்த பதற்றமும் இல்லாமல் ஹாயாக தப்பி சென்றது தெரியவந்து. கொள்ளையனின் முகம் ஏதும் தெரியாததால் அவரது உடல் அமைப்பை வைத்து தேடும் பணிகள் நடக்கின்றன.

கட்டுமான பணிகள்

நகைக் கடையில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் அங்குள்ள தொழிலாளர்கள், கடை ஊழியர்கள், அக்கம்பக்கத்தில் நடக்கும் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

2ஆவது முயற்சியில் கொள்ளையனுக்கு வெற்றி

மேலும் அவர்களது கைரேகைகளும் பெறப்பட்டன. கொள்ளையனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகைக் கடையில் முகமூடி அணிந்த இதே நபர் கடந்த வாரமே கொள்ளையடிக்க முயன்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. தற்போது 2ஆவது முயற்சியில் நகைக் கடையில் கொள்ளை அடித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த காட்சிகளை கடை ஊழியர்களோ, சிசிடிவி ஆபரேட்டரோ கவனிக்காமல் இருந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போல் ஒருவர் கொள்ளை முயற்சி செய்ததை பார்த்து போலீஸுக்கு தகவல் கொடுத்திருந்தால், இந்த கொள்ளை சம்பவம் நடைபெறாமல் தடுத்திருக்கலாமே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+