மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: இன்ஸ்டா பிரபலம் மீனாட்சிக்கு நிஷாந்துடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்டா பிரபலம் மீனாட்சிக்கு நிஷாந்த்துடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது? மீனாட்சிக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா? அவர் தான் பிளான் செய்து கொடுத்தாரா? என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இது குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 15 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதால் 9 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மதுரையை சேர்ந்த நிஷாந்த்தின் தந்தை ரமேஷ் மற்றும் நிஷாந்தின் காதலி என கூறப்படும் இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Madurai Tanishq jewelry store robbery How did Instagram celebrity Meenakshi come to know Nishanth

டேட்டுவால் சிக்கிய நிஷாந்த்

இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நகையை எங்கே பதுக்கி வைத்து இருந்தனர் என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரித்தனர். இதில் கான்வாய் அருகே நகைகளை சாக்குப்பையில் புதைத்து வைத்து இருந்ததாகவும், அதனை போலீசார் தோண்டி எடுத்து மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. மொத்தம் 6 கிலோ நகைகளுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

போலீசாரின் விசாரணையில் நிஷாந்த் தான் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. நிஷாந்த் அடிக்கடி நகைக்கடைக்கு வந்து நோட்டமிட்டதும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது. ஒருமுறை கையில் கட்டுப் போட்டுக்கொண்டு அடிபட்டது போல வந்து நோட்டமிட்டு இருக்கிறார். இன்னொரு முறை தொப்பி அணிந்துகொண்டும், சாதாரண கஸ்டமர் போன்றும் என அடிக்கடி வந்து நோட்டமிட்டுள்ளார்.

மீனாட்சிக்கு நிஷாந்துடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி?

இவை எல்லாம் நிஷாந்த் கையில் போட்டு இருந்த டேட்டு மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்டா பிரபலம், மீனாட்சிக்கு நிஷாந்த்துடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது? மீனாட்சிக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா? அவர் தான் பிளான் செய்து கொடுத்தாரா? போன்ற தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்த நிலையில் இது குறித்து போலீசார் விளக்கம் அளித்தனர்.

அதில், கொள்ளையில் முக்கிய குற்றவாளியான நிஷாந்த் மதுரையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து விட்டு வேலைக்கு போகாமல், ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்றும், பணம் சம்பாதிக்க வேண்டும் எனவும் நினைத்து யூடியூப்பில் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். இதற்காக ஆடம்பர பைக் ஒன்று வாங்கி அதில் சாகசம் செய்து வீடியோ போட்டு வந்துள்ளார்.

இதையடுத்து தான் மதுரையில் உள்ள பிரபல யூடியூப் சேனலில் பணியாற்றிய மீனாட்சியுடன் நிஷாந்த்துக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மீனாட்சியும் அந்த யூடியூப் சேனலில் இருந்து விலகி தனியாக இவரே சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி சுற்றுலா செல்வது, சொந்த பணிகள் செய்வது உள்ளிட்டவற்றை வீடியோவாக போட்டு வந்துள்ளார்.

பிளான் போட்டு கொடுத்தாரா?

பிறகு நிஷாந்தும் மீனாட்சியும் இருவரும் ஒன்றாக யூடியூபில் வீடியோ போட ஆரம்பித்தனர். இருவரும் சேர்ந்து சமையல் செய்வது போன்ற வீடியோக்களையும் பதிவு செய்தனர். இந்நிலையில் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பிறகு நிஷாந்த், மீனாட்சியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். செல்போனில் பேசியதன் அடிப்படையில் மீனாட்சியிடம் விசாரணை மேற்கொண்டோம். இதில், கொள்ளை சம்பவத்தின் பின்னணி தெரியவந்தது.

அதுமட்டுமின்றி திருப்பாலை பகுதியில் மீனாட்சி புதிதாக வீடு கட்டி வருகிறார். எனவே இதற்கு அதிக பணம் செலவு ஆகும் என்பதால் கொள்ளை சம்பவத்திற்கு மீனாட்சியும் துணை போயிருக்கிறாரா?, இவர் தான் பிளான் போட்டு கொடுத்தாரா? என்ற கோணத்திலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும்" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+