மதுரையில் போலீஸ் தாக்கியதால் பூசாரி உயிரிழப்பு? நீதிபதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் காவல்துறையினர் தாக்கியதால் பூசாரி உயிரிழந்ததாக சொல்லப்படும் சம்பவத்தில உயர்நீதிமன்ற உத்தரவின்படி பிணவறையில் நீதிபதி முன்பு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த பூசாரி பரமசிவம் (55) என்பவருக்கும் அண்டை வீட்டாருக்கும் இடையே கடந்த ஜூலை 18 அன்று ஏற்பட்ட தகராறு சம்பவம் தொடர்பான விசாரணையின் போது பரமசிவத்தை சிந்தாமணி காவல்நிலைய போலீசார் தாக்கியதில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Madurai temple priest death issue

ஆகஸ்ட் 11 முதல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தனது உயிருக்கு எதுவும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் காவல்துறையினர் தாக்கியது தான் என அவர் இறப்பதற்கு முன்பு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந் நிலையில் கடந்த 15 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பரமசிவம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்த குடும்பத்தினர் இது குறித்து உரிய விசாரணை நடத்துமாறும், பரமசிவத்தை தாக்கிய சிந்தாமணி காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர், சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர் ஆனந்த், காவலர் அப்துல் முகமது உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவும் வலியுறுத்தியிருந்தனர்.

இதனடிப்படையில், மாவட்ட நீதிபதி மேற்பார்வையில் உடற்கூறாய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நேற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை தொடர்ந்து, இன்று மதுரை மாவட்ட 5-வது நடுவர்மன்ற நீதிபதி லட்சுமிபிரியா அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் பரமசிவத்தின் உடலை ஆய்வு செய்து, குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+