தம்பி பொறுத்தது போதும்! எங்கள் அரியாசனம் உனக்குத்தான்! விஜய்யை அழைக்கும் "இருவர்"! ரசிகர்கள் போஸ்டர்
மதுரை: மதுரையை திடீரென பரபரப்பாக்கிய விஜய் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்களிடம் இருக்கிறது. விஜய்யும் தனது படங்களில் லேசாக அரசியல் வாடையை சேர்த்துதான் வருகிறார்.

தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தும் விஜய், கடந்த ஏப்ரல் மாதம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் வரும் தேர்தலில் புதிய கட்சிகள் வரலாம் புதியவர்கள் வரலாம். எனவே காசு வாங்கி ஓட்டுபோடுவதை விட்டுவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளியுங்கள் என கூறியிருந்தார்.
எனவே இதன் மூலம் அவர் அரசியலுக்கு வருகிறார் என்ற மெசேஜை சொல்லியுள்ளதாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் அவர் நடித்த லியோ படம் வரும் 19-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இதன் இசை வெளியீட்டு விழாவும் திடீரென ரத்தாகிவிட்டது. இது அரசியல் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுவிட்டதாக ரசிகர்கள் கருதி வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜய் ரசிகர்களும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் பெரிதும் எதிர்பார்த்த இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சர்ச்சையான போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் மதுரை ரசிகர்கள் ஆளுங்கட்சியை விமர்சிக்கும் வகையிலேயே போஸ்டரை ஒட்டுகிறார்கள்.

அந்த போஸ்டரில் நாற்காலியில் விஜய் அமர்ந்திருப்பது போல் இருக்கிறது. அதில் இன்று நீங்கள் நேரு அரங்கத்திற்கு வருவதை தடுக்கலாம் ஆனால், நாளை உங்கள் கீழ் அமையப் போகும் அரசாங்கத்தை எவராலும் தடுக்க முடியாது' என போஸ்டரில் ஒட்டியுள்ளனர். அது போல் கடந்த காலம் எடப்பாடி பழனிசாமி, நிகழ்காலம் மு.க.ஸ்டாலின், எதிர்காலம் தளபதி விஜய் என போஸ்டர் ஒட்டி விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதுரையில் விடாது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகிறார்கள். அந்த வகையில் இன்று ஒட்டியுள்ள போஸ்டரில் தம்பி பொறுத்தது போதும் வா தமிழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க நாங்கள் அமர்ந்திருந்த அரியாசனம் உனக்காக காத்திருக்கிறது நாளைய முதல்வர் நீயே என குறிப்பிட்டு எம்ஜிஆர் விஜய் கையை பிடித்திருப்பது போலும் காமராஜர் விஜய்யின் தோளில் கை வைத்திருப்பது போன்றும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications