அமைச்சர், எம்எல்ஏ வைத்தே கும்பாபிஷேகம் நடத்துங்க.. தீர்த்தம் கூட தெளிக்கவில்லை.. மதுரை பெண் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளால் பக்தர்கள் கொந்தளித்து வருகின்றனர். ஒரு பக்கம் பக்தர்கள் அனுமதிக்கப்படாத சூழலில், இன்னொரு பக்கம் கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்படவில்லை. இதனை விமர்சித்து மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் விமர்சித்து பேசி இருப்பது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை நடைபெற்றது. இதனை காண்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மதுரையில் குவிந்தனர். இதனால் நேற்றிரவு முதலே மதுரை முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் பொது தரிசனம் காலை 10 மணிக்கு தான் தொடங்கப்பட்டது.

Meenakshi Amman Temple

அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்த போதும், கோபுர வீதிகளில் கூட போலீசார் அனுமதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் பேரி கார்டுகளை தள்ளிவிட்டு மக்கள் கோயிலின் கோபுர வீதிகளுக்கு சென்றனர். ஆனால் கும்பாபிஷேக முடிவடைந்த பின், மக்களின் பொறுமையை அமைச்சர்களும், தவெக நிர்வாகிகளும், கோயில் நிர்வாகமும் நிறைய சோதித்துவிட்டது என்று சொல்லலாம்.

ஏனென்றால் கோயில் கோபுரத்தில் நின்றிருந்தவர்கள் மீது கும்பாபிஷேக புனித நீர் டிரோன் கொண்டு தெளிக்கப்பட்டது. அதேபோல் சாமானிய மக்களுக்கும் புனித நீர் தெளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாதாரண தண்ணீரை மட்டும் கொஞ்சமாக தெளித்தனர். இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதுதொடர்பாக கும்பாபிஷேகத்தை காண வந்த மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசுகையில், ரூ.4 ஆயிரத்திற்கு பாஸ் வைத்திருப்பவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள். இதுக்கு பெயர் தான் கும்பாபிஷேகமா? சித்திரை வீதியில் யாருமே இல்லை. ஒரு வீதிக்கு 50 ஆயிரம் பேருக்கு அனுமதி கொடுத்திருந்தாலும், 2 லட்சம் பேர் வந்திருக்க முடியும். ஆனால் மொத்தமாகவே 2 ஆயிரம் தான் கும்பாபிஷேகத்தை பார்த்திருக்கிறார்கள்.

ஒருவர் மீது கூட தீர்த்தம் தெளிக்கப்படவில்லை. இதுக்குதான் நாங்கள் மீனாட்சியை பார்க்க வந்திருக்கிறோமா? 15 நாட்களாக காத்திருக்கிறோம். இப்படி செய்வதாக இருந்தால், நீங்கள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களை வைத்தே கும்பாபிஷேகம் செய்திருக்கலாமே? ஏன் மக்களுக்கு அழைப்பு கொடுத்தீர்கள். கைக்குழந்தையுடன் இரவு முதலே நிற்கிறோம். இது மக்களுக்கான ஆட்சி என்கிறீர்கள். இந்த கும்பாபிஷேகத்திலேயே உங்கள் ஆட்சி பற்றி தெரிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+