வந்தது டிரோன்.. துண்டை காணோம்.. துணியை காணோம்னு ஓடிய மதுரை யூத்ஸ்.. லுங்கியில் முகத்தை மறைத்த காமெடி
மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்டறிய ட்ரோன் கேமிராவை பயன்படுத்திய போது லுங்கியை எடுத்து இளைஞர்கள் சிலர் ஓடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
Recommended Video
கொரானா தொற்று பரவலை தடுக்கும் வகையில் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வெளியே வரும்போது அவர்களை கண்காணித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் ட்ரோன் கேமராக்களை போலீஸார் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள கண்மாய்கரை பகுதியில் இளைஞர்கள் சிலர் ஜல்லிக்கட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இளைஞர்கள்
அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கேமராவை பறக்க வைத்து கண்காணித்த போது பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த பகுதியில் வயல்வெளிகளில் விளையாடுவது தெரிய வந்துள்ளது.

வயல்
அதனைத் தொடர்ந்து அந்த இளைஞர்களை சுற்றி வளைத்து கேமராவை கண்ட 8 பேர் தலைத்தெறிக்க தப்பி ஓடிய நிலையில் இரண்டு பேர் மட்டும் கட்டியிருந்த லுங்கியால் முகத்தை மறைத்துக் கொண்டு வயலிலேயே படுத்து ட்ரோன் கேமிராவில் இருந்து மறைந்து செல்ல மேற்கொண்ட நடவடிக்கை நகைச்சுவையை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்கள்
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி அவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கேமராக்களிலிருந்து பயந்து ஓடும் காட்சிகள் வெளியாகி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி ட்ரெண்ட் ஆகிவருகிறது.

கண்காணிப்பு பணி
இது போல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிரோன் கேமிரா மூலம் திருப்பூரில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு மைதானத்தில் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் இந்த டிரோனை பார்த்தவுடன் லுங்கி அவிழ்வது கூட தெரியாமல் தலைத்தெறிக்க இளைஞர்கள் ஓடினர். அதிலும் ஒருவர் கேரம்போர்ட்டால் மறைத்துக் கொண்டு ஓடிய காட்சி வைரலானது. இதே போல் சேலத்திலும் மலை அடிவாரத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் லுங்கியில் மறைந்து ஓடும் காட்சிகள் சிரிப்பை வரவழைத்தது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications