அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!
மதுரை: தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி 59 ஆண்டுகளுக்கு பின் இடம்பெற ராகுல் காந்தியின் உயிர் நண்பர் மாணிக்கம் தாகூரே காரணம் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மாணிக்கம் தாகூரின் பிறந்தநாள் மதுரையில் உள்ள அவரது அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்ட போது, அமைச்சர் விஸ்வநாதன் இந்த கருத்தை பேசியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, முதல்வர் ஜோசப் விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கிறது. காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.

அதில் விஸ்வநாதனுக்கு உயர்கல்வித்துறை கொடுக்கப்பட்டது. ராஜேஷ் குமாருக்கு சுற்றுலா துறை அளிக்கப்பட்டது. இந்த வரலாற்று மாற்றத்திற்குப் பின்னால் இருந்த வியூகத்தை அமைச்சர் விஸ்வநாதன் உடைத்துள்ளார். மதுரையில் மாணிக்கம் தாகூரின் பிறந்தநாள் விழாவில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், "காங்கிரஸ் எம்பியும், ராகுல் காந்தியின் உயிர் நண்பருமான மாணிக்கம் தாகூர் எடுத்த சாதுர்யமான முயற்சிகள் தான், காங்கிரஸ் கட்சி மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமரக் காரணம்.
கடந்த பல தசாப்தங்களாகத் தமிழகத்தில் வெறும் கூட்டணிப் பங்கீட்டோடு மட்டுமே இருந்த காங்கிரஸை, முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசில் மந்திரி சபைக்குள் கொண்டு வந்த பெருமை மாணிக்கம் தாகூரையே சேரும் என்று அவர் வாழ்த்தி பேசினார். விருதுநகர் எம்பி-யான மாணிக்கம் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு நிர்வாகிகள் திரண்டு கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாணிக்கம் தாகூருக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். 1967ஆம் ஆண்டுக்குப்பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெறாமல் இருந்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த புதிய அரசியல் கூட்டணி மாற்றம் மற்றும் ஆட்சிப் பங்கீடு தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியுடன் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி மாணிக்கம் தாகூர் இந்த அரசியல் நகர்வைச் சாத்தியமாக்கியுள்ளார் என்ற அமைச்சரின் பேச்சு தற்போது தென் மாவட்ட காங்கிரஸ் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதன் மூலமாக தென் மாவட்டங்களில் மாணிக்கம் தாகூர் ஆதிக்கம் அதிகரிக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications