அமைச்சரிடம் ஓட்டு கேட்ட மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்.. புன்னகை பூத்த செல்லூர் ராஜூ.. மைதானத்தில் கலகல!
மதுரை: அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் வாக்கு சேகரித்ததால் அங்கு சிரிப்பலை எழுந்தது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளராக ராஜ் சத்யனும் திமுக சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக சு. வெங்கடேசனும் போட்டியிடுகிறார்கள்.
வெங்கடேசனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டோரிடம் சு. வெங்கடேசன் வாக்கு சேகரித்து வந்தார். அப்போது எதிரே அமைச்சர் செல்லூர் ராஜூ அங்கு வந்தார்.

உடனே வெங்கடேசன் அண்ணே, மறக்காம எனக்கு ஓட்டு போட்டுடுங்க என்றார். உடனே சுற்றியிருந்தவர்கள் சிரிக்க தொடங்கினர். அமைச்சரும் லேசாக புன்னகை பூத்தவாறு வெங்கடேசனுக்கு கை கொடுத்து ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு நகர்ந்தார்.

அமைச்சரின் அரசியல் நாகரிகம் பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications