உசிலம்பட்டி உமா தேவி படுகொலை.. மாடு வெட்டும் கத்தியால் கழுத்தை அறுத்ததாக பரபர தகவல்!

பெண்ணை கொன்ற கறிக்கடைக்காரை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: காய் வாங்க சென்ற உமாதேவியை, பீஃப் வெட்டும் கத்தியாலேயே கழுத்தை அறுத்து கொன்றுள்ளார் கறி கடைகாரர் மகாலிங்கம்!

உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் திராவிடமணி. இவரது மனைவி உமாதேவி. 45 வயதாகிறது. திராவிட மணி 20 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இதனால், பிழைப்புக்காக உசிலம்பட்டி மார்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் உமாதேவி நேற்று முன்தினம் இரவு காய்கறி வாங்கி வருவதாகவும், காலையில் வந்துவிடுவேன் என்றும் வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பி சென்றிருக்கிறார்.

மொட்டப்பாறை

மொட்டப்பாறை

ஆனால் நேற்று காலை திரும்பி வரவே இல்லை என்பதால் வீட்டில் உள்ளவர்கள் தேடி வந்தனர். இந்நிலையில், மொட்டப்பாறை என்ற இடத்திற்கு அருகே பாறைகள் நிறைந்த முட்புதரில் ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடப்பதாக உத்தப்பநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் கிடைக்கவும், விரைந்து சென்று பார்த்ததில், அது காய்கறி வாங்க போன உமாதேவிதான் என்பது தெரியவந்தது.

விசாரணை

விசாரணை

உமாதேவியின் உடம்பெல்லாம் காயமாக இருந்தது. பாறையின் மேல் பிணமாக போட்டு சென்றிருந்தனர். இதையடுத்து, உமாதேவியை கொன்றவர்கள் யார் என்று போலீசார் விசாரணையில் இறங்கினர். அடுத்த சில மணி நேரத்துக்கு எல்லாம் கொலையாளி சிக்கி உள்ளார்.

கறிக்கடைக்காரர்

கறிக்கடைக்காரர்

கறி கடை வைத்திருக்கும் மகாலிங்கம்தான் உமாதேவியை கொன்றுள்ளது தெரியவந்துள்ளது. 50 வயதான மகாலிங்கம் மேக்கிழார்பட்டியை சேர்ந்தவர். இவருக்கு உமாதேவி கடன் கொடுத்துள்ளார். வாங்கிய பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால், வீட்டிற்கே சென்று பணத்தை கேட்டுள்ளார் உமாதேவி. இதனால் மகாலிங்கத்துக்கு அவமானமும், ஆத்திரமும் ஆகிவிட்டதால், கொல்ல முடிவு செய்துள்ளார்.

மாடு வெட்டும் கத்தி

மாடு வெட்டும் கத்தி

அதற்காக உமாதேவியிடம்,"எனக்கு தெரிந்தவர் பணம் தருவதாக சொல்லி இருக்கிறார்.. வா.. வாங்கி தருகிறேன்" என்று சொல்லி, டூவீலரில் உமாதேவியை ஏற்றிக்கொண்டு மொட்டைமலை பகுதிக்கு சென்றுள்ளார். யாரும் இல்லாத அந்த இடத்தில் டூவீலரில் மறைத்து வைத்திருந்த மாட்டிறைச்சி வெட்டும் கத்தியால், உமாதேவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து, அங்குள்ள பாறை மீது போட்டு விட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+