கோடி கோடியாக செல்வம் தேடிவரும்.. மீனாட்சி அம்மன் கோவில் பள்ளியறை பூஜை தரிசன ரகசியம்
மதுரை: சிவாலயங்களில் தினசரியும் இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற பூஜை பள்ளியறை பூஜை. சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறையில் ஊஞ்சலில் ஒருசேர அமர வைத்து ஆராதனை செய்து தாலாட்டுப் பாடி பூஜை செய்வார்கள். இந்த பள்ளியறை பூஜையை தரிசனம் செய்தால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பலன்கள் கிடைக்கும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று நடைபெறும் பள்ளியறை பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கப் போகிறார். இந்த பூஜையில் பங்கேற்று அம்மனையும் சுவாமியையும் தரிசனம் செய்தால் பல்வேறு சிறப்புகள் தேடி வரும். சிவன் சக்தி ஐக்கியத்தை உணர்த்தும் இந்த பள்ளியறை பூஜையை தம்பதி சமேதராக காண்பவர்களின் குடும்பங்களில் ஒற்றுமை அதிகரிக்கும்.

எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்போல பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு அர்த்த ஜாமத்தில் மல்லிகை பூவால் கூடாரம் அமைத்து வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து கிடைக்கும் அன்னையின் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.
இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரின் வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும்.
பாதுகைகள் வந்த பின் அன்னைக்கு விசேஷ ஆரத்தி அதாவது மூக்குத்தி தீபாராதனை நடக்கிறது. உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை. எனவேதான் அன்னையின் மூக்குத்தியை மிக தெளிவாக தரிசிக்க முடியும்.
அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்க்கு மிக அருகில் காட்டுவார்கள். அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம். மீனாட்சியின் மாணிக்க மூக்குத்தியை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டு விடும்.
மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும். இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார்.
அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டாத காட்சியாகும்
பள்ளியறை பூஜை சிவ சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம். கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசித்தால் நல்ல பயனைக் கொடுக்கும் என்பதும் மீனாட்சி கோவிலில் மறைந்துள்ள பள்ளியறை பூஜை தரிசன ரகசியமாகும்.
பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் சிவன் நகர்வலம் வரும் போது சிவபுராணம் படிக்க வேண்டும். பள்ளியறை பூஜையை தினம் தினம் தரிசனம் செய்தாலே வளமான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி சுமக்கும் பாக்கியம் பெற்றவர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதிகளாக மாறுவார்கள்.
பள்ளியறை பூஜையில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வேலை அல்லது தொழில் செய்து வருபவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையை தரிசித்து வருவதன் மூலமாக வேலையில் இருந்த பிரச்சினைகள் விலகிவிடும். தொழிலில் படிப்படியான வளர்ச்சியைக் காணலாம்.
பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கொடுப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பள்ளியறை பூஜைக்கு நெய், நல்லெண்ணெய் கொடுப்பவர்களுக்கு கண் பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை. பள்ளியறை பூஜையிலும், அதன் நிறைவுப் பகுதியிலும் அன்னதானம் செய்பவர்கள் தொழிலில் அமோக வளர்ச்சியை அடைவர். பல மடங்கு லாபம் அவர்களைத் தேடி வரும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications