மேலூரில் மீண்டும் இறங்கும் மாணிக்கம் தாகூர் மாமனார்? சீட்டை பெற போராடும் கதர்கள்.. என்ன நடக்கிறது?
மதுரை: மேலூர் தொகுதிக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், மேலூர் தொகுதியில் சீட் பெற்றுவிட வேண்டும் என்பதில் கதர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கான ரேஸில் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக - காங்கிரஸ் இடையில் 28 தொகுதிகள் என்று தொகுதி பங்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பின், வேட்பாளர்கள் அறிவிப்புக்கு கால தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஆனால் மதுரை மாவட்டத்தின் மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. நேற்று காலையே மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன் பின்னணியில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தனது மாமனார் ராஜேந்திரனுக்காக மேலூர் தொகுதியை மாணிக்கம் தாகூர் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. 2021 சட்டசபைத் தேர்தலில் மேலூர் தொகுதியில் ராஜேந்திரன் போட்டியிட்ட போது படுதோல்வியை சந்தித்தார். அதிமுக தரப்பில் மீண்டும் பெரியபுள்ளானுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ராஜேந்திரனுக்கு சீட் கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை கழக மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன், ஓபிசி பிரிவு நிர்வாகி நித்யபிரியா, சிவகங்கை நிர்வாகி சிஆர் சுந்தரராஜன், முன்னாள் இளைஞரணி நிர்வாகி மேலூர் ராம்சுந்தர் ஆகியோர் சீட் கேட்டு வருகின்றனர். இவருக்கு சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் ஆதரவாக இருப்பதாக கூறுகின்றனர்.
இருந்தாலும் கடந்த சில நாட்களாக மாணிக்கம் தாகூர் பல்வேறு பதவிகளில் இருந்து விலகி இருக்கிறார். அதேபோல் அடுத்த காங்கிரஸ் தலைவருக்கான ரேஸில் மாணிக்கம் தாகூர் இருப்பதால், மீண்டும் ராஜேந்திரனுக்கு சீட் அளிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
அண்ணாமலை இனி மாநில அரசியலில் இல்லை.. பாஜக டாட்டா காட்டிவிட்டது.. பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்? "அவருக்கு வேறு திட்டம் இருக்கு.." பியூஷ் கோயல் கொடுத்த விளக்கம்! -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
சுந்தர்.சி-க்கு அரசியல் தெரியாதா? மதுரை மத்திய தொகுதி மக்கள் மிரளப் போறாங்க.. பில்டப் ஏற்றும் குஷ்பு -
ஹலோ பிடிஆர்.. ஸ்கூல் பையன் மாதிரி.. வாய்சவடால்விட்ட குஷ்பு.. சுந்தர்.சி-யை கோர்த்துவிட்ட மனைவி!












Click it and Unblock the Notifications