கம்பம் டூ கோவில்பட்டி! ஒரே நாளில் 9 தொகுதிகளில் ஆய்வு! அமைச்சர் அன்பில் மகேஷ் Non Stop பயணம்!
மதுரை: தனது 234/77 ஆய்வுப் பயணத் திட்டத்தின் கீழ் நேற்று ஒரே நாளில் 9 சட்டமன்றத் தொகுதிகளில் ஆய்வு நடத்தி கவனம் ஈர்த்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
சென்னை டூ தேனி: கடந்த செவ்வாய்கிழமை மாலை சென்னையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இல்ல மண விழாவில் உதயநிதி ஸ்டாலினோடு கலந்துகொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவருடனேயே தேனி புறப்பட்டுச் சென்றார். தேனி மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று கலந்துகொண்ட நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் தனது பணிகளை கவனிக்க கிளம்பிவிட்டார்.

ஒரே நாளில் 9 தொகுதிகள்: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லோயர் கேம்ப்பில் காலையில் ஆய்வை தொடங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் மாலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிறைவு செய்தார். ஆண்டிப்பட்டி, கம்பம், ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடி, பெரியகுளம், உசிலம்பட்டி, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி என நான் ஸ்டாப் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ், எந்த இடத்திற்கும் தன்னுடன் கட்சிக்காரர்களை அழைத்துச் சென்று பந்தா காட்டவில்லை.
மாணவர்கள் -ஆசிரியர்கள்: இன்னும் சொல்லப்போனால் உதவியாளர்கள், மெய்காவலர்களையே கூட தன்னுடன் வைத்துக்கொள்ளவில்லை. பள்ளிகளில் அவர்களை வகுப்புகளுக்கு வெளியேவோ அல்லது தள்ளியோ நிற்க வைத்துவிட்டு அமைச்சர் என்கிற பகட்டின்றி எளிமையுடன் மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடினார். ஒரு சில இடங்களில் பள்ளி வளாகங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அதனை சரிசெய்ய உத்தரவிட்டார்.
80 தொகுதிகள் நிறைவு: அமைச்சர் அன்பில் மகேஷை பொறுத்தவரை பயணங்கள் செல்ல சலிக்காதவர். 234/77 ஆய்வுப் பயணத் திட்டத்தின் கீழ் இதுவரை 80 தொகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆய்வு நடத்தியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் எஞ்சியுள்ள 154 தொகுதிகளிலும் அடுத்தடுத்து ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கு முன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த எந்த அமைச்சரும் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று அங்குள்ள அரசுப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டதாக வரலாறு இல்லை. மாவட்டத்திற்கு ஒன்றிரண்டு பள்ளிகளில் வேண்டுமானால் ஆய்வு செய்திருப்பார்கள். அன்பில் மகேஷ் மட்டுமே 234 தொகுதிகளுக்கும் பயணத் திட்டத்தை வகுத்து வைத்திருக்கிறார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications