மு.க.ஸ்டாலின் பேசுவதை நம்பாதீர்கள்... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
மதுரை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதை மக்கள் நம்ப வேண்டாம் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அவர் இவ்வாறு கூறினார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுக வதந்தியை பரப்புவதாக சாடினார்.
இதனிடையே ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த அவர் அது பற்றி ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துவிட்டதாக கூறினார்.

நிச்சயம் நடக்கும்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்றும், அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம் எனவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் குறித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேசியதை சுட்டிக்காட்டினார்.

நம்ப வேண்டாம்
உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்தாது என திமுக வதந்தியை பரப்பி வருவதாக சாடினார். மேலும், இந்த விவகாரம் மட்டுமின்றி தமிழக அரசு மீது குறை கூறி மு.க.ஸ்டாலின் பேசுவது எதையும் மக்கள் நம்பக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார். உச்சநீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளதால் அதை தமிழக அரசு நிறைவேற்றும் எனக் கூறினார்.

மழுப்பல்
இதனிடையே துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், அதை கண்டுகொள்ளாதபடி மற்ற விவகாரங்களை பற்றி பேசினார். மீண்டும் அதே கேள்வி எழுப்பப்பட்டதால், இது பற்றி அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே பதில் அளித்துவிட்டதால் மேலும், அது தொடர்பாக தாம் பேசுவது சரியாக இருக்காது என நழுவினார்.

நிதானம்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செயல்பாடுகளில் மிகுந்த மாற்றம் தென்படத்தொடங்கியுள்ளது. முன்பெல்லாம் எதைப் பற்றியும் கவலைக்கொள்ளாமல் மனதில் பட்டதை தைரியமாக பேசுவார். அது எவ்வளவு பெரிய சர்ச்சைகளாக இருந்தாலும் எதிர்கொள்வார். ஆனால், இபோது நிதானத்தை கடைபிடிப்பதோடு வார்த்தைகளையும் அளந்து பேசுகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications