திறமையான பிரதமர் மோடி அதிமுகவுடன் கூட்டணி வைப்பது சாதாரண விஷயமல்ல- யாரை மெச்சுகிறார் அமைச்சர்?
மதுரை: திறமையான பிரதமர் என பெயர் பெற்ற மோடி அதிமுகவுடன் கூட்டணி வைப்பது சாதாரண விஷயமல்ல என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
மதுரை மேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் திறமையான பிரதமர் மோடி அதிமுகவுடன் கூட்டணி வைப்பது சாதாரண விஷயமல்ல.
மக்கள் சக்தி அதிமுகவிடமே உள்ளது என பாமக முடிவு செய்துள்ளது. பணத்துகாக அதிமுகவுடன் ராமதாஸ் விலைக்கு போய்விட்டார் என ஸ்டாலின் கூறுவது கண்டிக்கத்தக்கது.

கொள்ளைக்காகவா
அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்தால் பணத்திற்காக வைக்கப்பட்டுள்ளதா அப்போ திமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டும் அது கொள்கைக்காக வைப்பது என்ற அர்த்தமா.

வாபஸ் பெறுமா
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு திமுகதான் காரணம். வழக்கை வாபஸ் பெற ஸ்டாலின தயாரா? அதிமுக கூட்டணியில்லாதவர்கள் இனி பிரஷர் மாத்திரையை போட்டுக் கொள்ள வேண்டும்.

சலசலப்பு
இனி அதிமுகவை யாரும் உரசி பார்க்க முடியாது என்றார் திண்டுக்கல் சீனிவாசன். திறமையான பிரதமர் என பெயர் பெற்ற மோடி அதிமுகவுடன் கூட்டணி வைப்பது சாதாரண விஷயமல்ல என அவர் பேசியது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாடிக்கை
மோடி திறமையானவர் என்றால் அதிமுக திறமையற்றதா என்ற கேள்வி எழுகிறது. இதெல்லாம் அமைச்சருக்கு புதுசா. எப்போது மைக் முன்பு பேசினாலும் ஏதாவது ஏழரையை இழுப்பது அவருக்கு வாடிக்கைதானே என கட்சியினர் அங்கலாய்த்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications