மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டில் தங்ககாசு மழை! அமைச்சர் மூர்த்தியின் தாராளம்! உற்சாகத்தில் வீரர்கள்!

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தங்கக்காசுகளை வாரி இறைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி.

நேற்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டிலும் அமைச்சர் மூர்த்தி 100-க்கும் மேற்பட்டோருக்கு 2 கிராம் தங்ககாசுகளை பரிசாக அளித்து வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

நேற்றும் சரி இன்றும் சரி ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை விட்டு நகராமல் முழுமையாக அங்கேயே இருந்து பரிசு மழை பொழிந்து வருகிறார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அமைச்சர் மைக்கில் அழைத்தும்.. பரிசு பெற மறுத்த இளம்பெண்.. என்ன காரணம்? அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அமைச்சர் மைக்கில் அழைத்தும்.. பரிசு பெற மறுத்த இளம்பெண்.. என்ன காரணம்?

 மாவட்டச் செயலாளர்

மாவட்டச் செயலாளர்

மதுரை வடக்கு மாவட்ட திமுகச் செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சருமான மூர்த்தி ஜல்லிக்கட்டு விழாவை தடையின்றி நடத்துவதற்கு முதலமைச்சரிடம் பேசி கொரோனா கட்டுப்பாடுகளுக்கும் மத்தியிலும் அனுமதி பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில், நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காலை 7 மணிக்கெல்லாம் சென்று தொடங்கி வைத்த அவர், மாலை 5 மணி வரை அங்கேயே இருந்து வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தங்கக்காசுகளை வாரி இறைச்சார்.

தங்கக்காசுகள்

தங்கக்காசுகள்

இதேபோல் இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டையும் காலை 7 மணிக்கெல்லாம் சென்று தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி, நாற்காலியில் கூட அமராமல் நின்றபடியே ஜல்லிக்கட்டை கண்டு ரசித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் நேற்றை போலவே இன்றும் 2 கிராம் தங்கக்காசுகளை அள்ளிக் கொடுத்து வருகிறார். இதனால் மாடுபிடி வீரர்கள் அமைச்சர் கொடுக்கும் தங்கக்காசுகளை பெறுவதற்காக போட்டி போட்டு காளைகளை அடக்கி வருகின்றனர்.

முதல்வர் பெயரில்

முதல்வர் பெயரில்

இதனிடையே அதிக எண்ணிக்கையில் காளைகளை அடக்கிய வீரருக்கு முதல் பரிசாக கார் ஒன்றையும் முதலமைச்சர் பெயரில் பரிசாக கொடுக்கிறார் அமைச்சர் மூர்த்தி. டட்சன் நிறுவனத்திலிருந்து இதற்காக ஏற்கனவே 3 கார்களை புக் செய்து அதனை விழா நடைபெறும் இடத்தில் அனைவரது பார்வையிலும் படும் படி வைத்திருக்கிறார். இதேபோல் இரண்டாம் பரிசு வெல்பவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் பைக் கொடுக்கிறார் அமைச்சர் மூர்த்தி.

Recommended Video

    Palamedu Jallikattu: உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்.
    பழனிவேல் தியாகராஜன்

    பழனிவேல் தியாகராஜன்

    இதனிடையே அவனியாபுரம், பாலமேடு என இரண்டு ஊர்களிலும் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு அங்கிருந்து புறப்பட்டுச் செந்ன்றுவிட்டார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அமைச்சர் மூர்த்தி மட்டுமே மாவட்ட ஆட்சியருடன் ஜல்லிக்கட்டு நிறைவடையும் வரை விழா மேடையில் இருக்கிறார். பாலமேட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Minister Moorthy gifted gold coins to jallikattu heroes
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X