செந்தில் பாலாஜி கைது எல்லாம் சும்மாதான்.. அடுத்த ஒரு அமைச்சருக்கு இருக்கு.. கொளுத்தி போடும் அண்ணாமலை
மதுரை: செந்தில் பாலாஜியை போல இன்னொரு அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என் குல தெய்வத்தின் மீது ஆணையாக எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று அண்ணாமலை பேசினார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் - என் மக்கள்" என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொள்கிறார். கடந்த மாதம் 28 ஆம் தேதி ராமநாதபுரத்தில் அண்ணாமலையின் பாத யாத்திரை தொடங்கியது. ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கிய அண்ணாமலையின் பாத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அண்ணாமலையின் நடைபயணம் நேற்று மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்றது.

தொடர்ந்து மேலூர் பஸ் நிலையம் அருகே திறந்த வேனில் நின்ற படி அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாயையில் அகப்பட்டு கிடக்கிறார்கள். இந்த மாயையில் அகப்பட்டு கிடக்கும் மக்களை மீட்பதே பாதயாத்திரையின் நோக்கம். தமிழ்நாட்டில் நேர்மையான மிக சிறந்த ஆற்றல் மிகுந்த அரசியல்வாதியான கக்கனை அறிமுகப்படுத்தியது மேலூர்தான்.
ஆனால், தற்போதுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, கக்கனுக்கு நேர் எதிரானவராக உள்ளார். திமுக ஆட்சி கொள்ளையடிக்க கூடிய ஆட்சியாக உள்ளது. ஏழைக்குடும்பங்களைத்தான் டாஸ்மாக் பெரிதும் பாதிக்கிறது. மக்கள் குடிக்க வேண்டும் என்றால் கள்ளுக்கடை திறந்துவிடலாம். அமைச்சர் மூர்த்தியை பற்றி என்ன சொல்வது.... மூர்த்தியை பற்றி தெரியாதவர்கள் யாருமே இல்லை.

எத்தனை குவாரி உடைக்க போகிறார் என்று அவருக்குதான் தெரியும். செந்தில் பாலாஜி உள்ளே போனது எல்லாம் சும்மாதான்.. மூர்த்திக்கு இருக்கு பாருங்க.. நான் எதாவது சொல்லி நடந்து விட்டது என்றால்... பிறகு அண்ணாமலை சொல்லித்தான் நடந்து விட்டது என்று சொல்லி விடாதீர்கள்... சத்தியமாக எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை. குலதெய்வம் மீது ஆணையாக எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை.
ஆனால், நடந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. மதுரை தொகுதியின் எம்.பி. வெங்கடேசன், விளம்பரங்களிலும், புத்தக வெளியீட்டு விழாவிலும் மட்டும் தான் இருக்கிறார். கன்னியாகுமரி வரை ராகுல் காந்தி மாஸ் என்றும், கேரளா சென்று விட்டால் ராகுல் காந்தி டம்மி எனவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறி வருகிறார்கள். முல்லை பெரியாறு பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினையில், கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்களை ஏமாற்றுகிறார்கள். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
-
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? தீயாகப் பரவிய தகவல்.. உண்மை என்ன? -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த்












Click it and Unblock the Notifications