8 மாதங்கள் என்ன?.. எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது.. அமைச்சர்
மதுரை: 8 மாதங்கள் என்ன, எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்தார்.
இதுகுறித்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறுகையில் 8 மாதங்களில் தேர்தல் வரும் மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் தீர்ப்பு அதிமுகவிற்கு மக்கள் வழங்குவார்கள். திமுக தற்போது எதார்த்தமான நிலையில் இல்லை.
உரிமை என்று சொல்லி திமுக ஆதிகாலத்தில் உள்ளதை போன்று செயல்பட்டு வருகிறது. வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தங்களை தயார்படுத்துவதில் திமுக மிகவும் பின்தங்கியுள்ளது. திமுக காலத்தால் பின்தங்கி மங்கிப்போய் இருக்கிறது.
Recommended Video

தத்தளிப்பு
மக்களின் கவனத்தை ஈர்க்க முடியாமல் திமுக தத்தளித்துக் கொண்டுள்ளது. காலத்திற்கு ஏற்ப மக்களின் தேவையை அறிந்து கொள்கையை முன்வைத்து மக்களை பாதுகாப்பதிலும் உரிமையை மீட்பதிலும் அதிமுக அரசு முனைப்பு காட்டி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது தொண்டர்களை சோர்வடையாமல் இருப்பதற்காக முதல்வராகி விடுவோம் என கூறுவது எதார்த்தம்.

பழி சுமத்துதல்
தேர்தல் திருவிழா வரும்போது பல்வேறு கட்சிகள் வரும் காட்சிகள் வரும் ஆட்சி மாற்றம் தருவதாகவும், முன்னேற்றத்தை தருவதாக கூறுவார்கள், அதிமுக அரசு மீது பழி சுமத்துவார்கள் எந்த கட்சியும் ஆளும் கட்சியை பாராட்ட மாட்டார்கள் ஆனால் மக்கள் மட்டும் பாராட்டுவார்கள்.

அரியர்ஸ் தேர்ச்சி
திமுக எந்த மக்கள் பணியிலும் ஈடுபடவில்லை என்ற எங்களது குற்றச்சாட்டை திமுக தலைவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 5 மாதமாக எந்த பணியும் செய்யவில்லை என முக. ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அரியர்ஸ் தேர்ச்சி அறிவிப்பு குறித்து யூசிஜி மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் ஆர் பி உதயகுமார்.

திமுக பொதுக் குழு கூட்டம்
முன்னதாக நேற்று திமுக பொதுக் குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சி அமைக்கும். எனவே தொண்டர்கள் இப்போதிலிருந்தே தேர்தலுக்கு உழைக்க தயாராக வேண்டும் என தெரிவித்தார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications