அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் தந்தை மறைவு - முதல்வர் பழனிச்சாமி இரங்கல்
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தை போஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. அமைச்சரின் தந்தை மறைவுக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரை: தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தை போஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. அமைச்சரின் தந்தையின் மறைவுக்கு முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.
தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியின் வேட்பாளராக களம் இறங்கினார். டி.கல்லுப்பட்டி அருகே டி.குன்னத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அம்மா கோவில் வளாகத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.

இவரது பெற்றோர்களும் அமைச்சருடன் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் உதயகுமார் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
சென்னையில் நேற்று முதல்வர் பழனிசாமி தலைமையிலான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றிருந்தார். இதனால் சென்னையில் இருந்த அவருக்கு தந்தையின் மறைவு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாக மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

மறைந்த போஸ் உடல் டி.குன்னத்தூர் அம்மா கோவில் வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பிற்பகல் 2 மணிக்கு அம்மா கோவில் வளாகத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் தந்தை மறைவுக்கு முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு வருவாய்,பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு ஆர்.பி.உதயகுமார் அவர்களின் தந்தை திரு. ஆர்.போஸ் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

போஸ் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications