தொட்டுக் கூட பார்க்க முடியாத கோட்டை அதிமுக.. ஆர்பி உதயக்குமார் ஆவி பறக்கும் பிரச்சாரம்!
திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
மதுரை: அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று சொல்கிறார் தினகரன். இவர்தான் உண்மையான துரோகி. யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாத கோட்டை அதிமுக என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பேசியுள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. அதிமுக வேட்பாளர் முனியாண்டிக்கு ஆதரவாக, ஓபிஎஸ், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பிரச்சாரத்திற்குக் கூட்டம் வருகிறதோ இல்லையோ, தலைவர்களின் பேச்செல்லாம் நல்லாருக்கு. முனியாண்டி முகத்தில் பால் வடிகிறது என்று சொல்கிறார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அதையும் அதிமுகவினர் ரசிக்கின்றனர்.

நாகமலை
இந்த நிலையில் வருவாய் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தீவிரப் பிரச்சாரத்தில் குதித்துள்ளார். மதுரை நாகமலை புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார்.

ஆட்சி கவிழ்ப்போம்
உதயக்குமார் பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தினகரனும் ஒரே மாதிரி பேசி வருகிறார்கள். அதாவது அதிமுக ஆட்சி மே 23ம் தேதிக்குப் பிறகு இருக்காது. கவிழ்ந்து விடும். கவிழ்ப்போம் என்று பேசி வருகிறார்கள்.

பச்சை துரோகம்
இது அம்மாவின் அரசு. அம்மாவால் ஏற்படுத்தப்பட்ட அரசு. இதை திமுகவுடன் சேர்ந்து கவிழ்ப்போம் என்று சொல்கிறார் தினகரன். இதை விட பெரிய துரோகம் என்ன இருக்க முடியும். இதுதான் பச்சை துரோகம். இவர் எங்களைப் பார்த்து துரோகிகள் என்று சொல்கிறார்.

நடவடிக்கை
அதிமுக மட்டுமல்ல, அம்மா உருவாக்கிய ஆட்சியையும் கூட இவர்களால் தொட்டுப் பார்க்க முடியாது. கோட்டை இது இது. திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள பிரச்சினைகளை நான் அறிவேன். அனைத்தையும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் உதயக்குமார்.

இரு முனை தாக்குதல்
அதிமுகவுக்கு சற்றே ஆறுதலான தொகுதிகளாக பார்க்கப்படுவது சூலூர் மற்றும் திருப்பரங்குன்றம்தான். ஆனால் திருப்பரங்குன்றத்தில் திமுக ஒரு பக்கமும், அமமுக மறுபக்கமும் என இரு முனைத் தாக்குதலை கொடுத்து வருவதால் அதிமுக தலைவர்கள் திருப்பரங்குன்றத்திற்கு தனி கவனம் கொடுத்து பிரச்சாரம் செய்து வருகின்றனராம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications