அதிமுக அரசை குறை சொல்ல திமுகவுக்கு அருகதையே இல்ல.. செல்லூர் ராஜூ செம கோபம்!
மதுரை: அதிமுக அரசை குறை சொல்ல திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ சாடியுள்ளார்.
மதுரை மாநகராட்சி சார்பில் பெத்தானியாபுரம் பகுதியில் பேட்டரி வாகனங்கள், மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளுக்கான குப்பைத் தொட்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேட்டரி வாகனங்கள் மற்றும் குப்பை தொட்டிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் பாசனக் கால்வாய் தூர் வாரப்பட உள்ளதாக கூறினார்.

குடிநீதி தட்டுப்பாடு இல்லை
மதுரையில் மாடக்குளம், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகளை பராமரிக்கும் வழிகளை மேற்கொண்டதால்தான் தற்போது குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் கூறினார். தற்போது 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படுகிறது
பாதாளச் சாக்கடை நீர் குடிநீரில் கலப்பதற்குக் காரணம் பாதாளச் சாக்கடையில் உள்ள பழைய பைகள் தான் என்ற அவர் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

திமுகவுக்கு அருகதை இல்லை
இதனிடையே தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையில் அதிமுக அரசு அலட்சியமாக செயல்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ அதிமுக அரசை குறைகூற திமுகவுக்கு அருகதை இல்லை என்றார்.

பொய் திட்டங்களை கூறி வெற்றி
திமுக ஆட்சியில் நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்பட்டதா என அவர் கேள்வி எழுப்பினார். பொய்யாக இல்லாத திட்டங்களையும் நிறைவேற்ற முடியாத திட்டங்களையும் கூறி தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.

எப்படி இப்படி வாக்குறுதி அளித்தார்?
நாடாளுமன்ற தேர்தலின் போது ஸ்டாலின் தேவையில்லாமல் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறியுள்ளார். அவர் எப்படி நாடாளுமன்ற தேர்தலின் போது மாநில அரசு சம்பந்தபட்ட வாக்குறுதியை அளித்த்தார் என தெரியவில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications