பிடிஆர் கார் மீது.. "ரவுடிகளை" வைத்து அண்ணாமலை "பிளான்" போட்டு தாக்கி உள்ளார்! சீறிய செந்தில் பாலாஜி
மதுரை: நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் வைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார் அளித்துள்ளார்.
Recommended Video
மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்தார். இவரின் உடலுக்கு அரசு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவரின் வீட்டிற்கு சென்றார்.

பிடிஆர்
லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னையில் இருந்து விமானம் மூலம் பிடிஆர் மதுரைக்கு வந்தார். அப்போது விமான நிலைய வாசலில் பாஜகவினர் பலர் திரண்டு இருந்தனர். இந்த நிலையில் அங்கு வந்த பிடிஆர்.. போலீசாரிடம்.. லட்சுமணன் உடல் அவரின் வீட்டிற்கு செல்கிறதே அங்கு போய் அஞ்சலி செலுத்தட்டும் தேவையில்லாத கூட்டம் ஏன் என்று கூறி உள்ளார். இதையடுத்து பாஜகவினரை அங்கிருந்த போலீசார் கலைத்து உள்ளனர். இந்த தகராறு காரணமாக திரும்பி செல்லும் போது பிடிஆர் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசி உள்ளனர்.

6 பேர் கைது
இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக தற்போது வரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை போலீசார் மூலம் கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். முக்கியமாக பிடிஆர் கார் மீது செருப்பை வீசி எறிந்த பெண்ணும் கைது செய்யப்படாத நிலையில் அவர் தேடப்பட்டு வருகிறார்.மற்ற 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

என்ன நடந்தது?
இந்த கூட்டத்தை திரட்டியது யார்.. இதற்கு பின்புலமாக இருந்தது யார் என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. பாஜக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். இவர்களை சட்டப்படி விசாரிக்க வேண்டும். பின்னால் இருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திமுகவினரை இந்த சம்பவம் கொதிப்பில் ஆழ்த்தி உள்ளது.

செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார் அளித்துள்ளார். மாண்புமிகு அமைச்சர் அண்ணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது, ரவுடிகளை வைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர். அமைதி பூங்காவான தமிழகத்தில் வன்முறைகளை தூண்டும் இவர்களின் உண்மையான முகத்தை தமிழக மக்கள் உணர வேண்டும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications