எம்.ஜி.ஆர். சாதிக்காததை ஜெயலலிதா சாதித்தார்... அமைச்சர் உதயகுமார் பேச்சால் மீண்டும் சர்ச்சை..!
மதுரை: எம்.ஜி.ஆரால் சாதிக்க முடியாததை கூட ஜெயலலிதா சாதித்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் நிர்வாகத்திறமையோடு ஜெயலலிதாவை ஒப்பிட்டுப் பேசி அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஜெயலலிதாவை புகழ்வதாக நினைத்து எம்.ஜி.ஆரை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைச்சர் உதயகுமார் பேசியிருப்பது அதிமுகவின் சீனியர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

சர்ச்சைப் பேச்சு
தமிழக அமைச்சர்களில் ஒரு சிலர் கூறும் கருத்துக்கள் அவர்களை அறியாமல் சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறிய கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதுவென்ன என்றால், எம்.ஜி.ஆரே சாதிக்காததை ஜெயலலிதா சாதித்துள்ளார் என்பது தான்.

இரட்டை இலை
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிமுகவை வெற்றிபெற வைத்தார் ஜெயலலிதா என்றார். எம்.ஜி.ஆர். காலத்தில் கூட இப்படி தேர்தலை சந்தித்ததில்லை என்பது தான் அவரது பேட்டியின் சாராம்சம். இதில் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஒப்பீடே தேவையில்லை. ஆனால் அமைச்சர் உதயகுமார் யதார்த்தமாக கூறிய கருத்து எம்.ஜி.ஆர். அபிமானிகளை அதிருப்திக்கொள்ளச் செய்துள்ளது.

பூகம்பம் வெடிக்கும்
திமுகவில் எதுவும் நடக்காதது போல் அமைதியாக வெளியில் தெரிந்தாலும் உள்ளே பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருப்பதாகவும், விரைவில் திமுகவில் பூகம்பம் வெடிக்கக்கூடும் எனவும் அமைச்சர் உதயகுமார் கூறினார். சர்வாதிகாரப் போக்குடன் ஸ்டாலின் திமுகவை வழிநடத்திச் செல்வதாக விமர்சித்த அவர், கருத்துப் பரிமாற்றங்களுக்கு அங்கு இடமில்லை எனக் கூறினார்.

அரசியல்
அதிமுகவில் ஆரோக்கியமான முறையில் கருத்துப்பரிமாற்றங்கள், ஆலோசனைகள் நடப்பதாகவும் திமுகவில் சர்வாதிகாரம் மட்டும் தான் உள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் குறிப்பிட்டார். வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக 3-வது முறையாக தொடர்ச்சியாக வெற்றிபெற்று சரித்திர சாதனை படைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications