வருங்கால முதலமைச்சர் உதயகுமார்... ஆர்வமிகுதியில் வாழ்த்துக் கோஷம் எழுப்பிய ஆதரவாளர்கள்..!
மதுரை: அமைச்சர் உதயகுமாரை அவரது ஆதரவாளர்கள் வருங்கால முதலமைச்சரே என வாழ்த்துக் கோஷம் எழுப்பியது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு சாலை திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று சென்றிருந்தார்.

சாலை திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பின்னர் உள்ளூர் அதிமுகவினரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவரது ஆதரவாளர்கள் திடீரென வருங்கால முதலமைச்சர் அண்ணன் உதயகுமார் என முழக்கம் எழுப்பினர்.
இந்தக் கோஷத்தை செவிமடுக்காததைப் போல் இருந்த உதயகுமார் புன்னகை பூத்த முகத்துடன் அங்கிருந்து சற்று நேரத்தில் கிளம்பினார். இதனிடையே இது ஏதேச்சையாக நடைபெற்ற நிகழ்வு என்றும் ஆர்வமிகுதியில் ஆதரவாளர்கள் இதுபோல் முழக்கம் எழுப்புவது வழக்கமான ஒன்று தான் எனவும் திருமங்கலம் அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் இப்போது தான் பஞ்சாயத்து முடிந்து நிலைமை ஓரளவு சீராகி வருகிறது. அதற்குள் அமைச்சர் உதயகுமாரை முதலமைச்சர் என அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டிருப்பது அதிமுகவின் அனைத்து மட்ட நிர்வாகிகளின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது.
என் புருஷன் குழந்தைமாதிரி திரைப்படத்தில் நடிகர் லிவிங்ஸ்டனை வருங்கால ஜனாதிபதி முருகேசன் என ஒருவர் கூவும் காட்சி இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் அந்தக் காட்சியுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் இது குறித்து திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications