அமைச்சர் பிடிஆர்-ன்னா எங்களுக்கு பயம்.. அவர் எழுந்து நின்னா சட்டசபை அமைதியாகும்.. உதயநிதி கலகல
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் என்றாலே எங்களுக்கு பயம்- உதயநிதி கலகல
மதுரை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்றால் அனைவருக்கும் பயம், அவர் எழுந்து நின்றாலே சட்டசபையே அமைதியாகிவிடும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாக பேசினார்.
மதுரை எல்.டி.சி கல்லூரி மாணவி ஜெர்லின் அனிகா காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் உள்பட மூன்று பதக்கங்களை பெற்றார்.
ஜெர்லின் அனிகாவுக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தது. மாற்றுத் திறனாளி மாணவி ஜெர்லின் அனிரா மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு வீராங்கனை ரேவதி, வீரமணி, ரோஸி மீனா உள்ளிட்ட தேசிய மற்றும் உலக அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதித்த மாணவிகளுக்கான பாராட்டு விழா நடந்தது.

போட்டி
இந்த போட்டியில் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் எல்லாரும் எப்படி இருக்கீங்க என கேட்டதும் கரகோஷம்!

வரவேற்பு
பின்னர் தனது பேச்சை தொடர்ந்தார். அனைவரும் பொறாமைப்படும் அளவிற்கு எனக்கு வரவேற்பு கொடுத்துள்ளீர்கள். இதை எனக்கான வரவேற்பாக நான் பார்க்கவில்லை. விளையாட்டுப் போட்டியில் சாதனை புரிந்த வீராங்கனைக்களுக்காக நீங்கள் அளித்த வரவேற்பாகதான் பார்க்கிறேன். விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து எங்கு விளையாட்டு போட்டிகள் நடந்தாலும் நான்தான் அங்கு சிறப்பு விருந்தினர்.

வீரர் வீராங்கனை
எல்லாவற்றிற்கும் சென்று வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வருகிறேன். ஜெர்லின் அனிகா எக்கனாமிக்ஸ் படித்து விளையாட்டிலும் சாதித்துள்ளார். ஆனால் எனக்கும் எக்கானாமிக்ஸுக்கும் ரொம்ப தூரம். கல்லூரியில் கஷ்டமாக இருக்கும். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் பேசும் போது நாங்கள் வரும் போது ஒரு பேராசிரியர் வருவதை போல் பாவித்து இருப்பதாக தெரிவித்தார்.

பேராசிரியர்
ஆம் அவர் உண்மையில் பேராசிரியர்தான். அவர் டிவி நிதழ்ச்சிகளில் கலந்து கொண்டால் எதிரே இருப்பவர்கள் திணறுவார்கள். மேலும் பிடிஆர் சட்டசபையில் எழுந்து நின்று பேசத் தொடங்கினால் சட்டசபையே அமைதியாக மாறிவிடும். அந்த அளவுக்கு அவர் எல்லாருக்கும் வகுப்பெடுப்பார். அவர் ஒரு மென்டார் போன்றவர். காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் சாதித்த வீராங்கனை ஜெர்லினுக்கு கடந்த ஆண்டில் தமிழகத்தில் முதல்வர் சார்பில் 79 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

15 விதமான போட்டிகள்
25 கோடி திட்டத்தில் 15 விதமான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் மாதம் சென்னையில் உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடக்கவுள்ளது. அதில் 8 நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள். விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. விளையாட்டில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். கல்வியை போல் விளையாட்டு கல்வியும் முக்கியமானது என்றார்.

அமைச்சர் உதயநிதி
இதையடுத்து அமைச்சர் உதயநிதி, வீராங்கனை ஜெர்லினுக்கு நினைவுப்பரிசு வழங்கி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அது போல் அவருடைய பயிற்சியாளர் சரவணனுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. நேற்றைய தினம் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது கேக் வெட்டும் போது அமைச்சர் அன்பில் மகேஷ் ஆங்கிரி பேர்டுக்கு பிறந்தநாள் என பாடிய போது அங்கு சிரிப்பலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications